மிரள வைக்கும் 'சைரா நரசிம்ம ரெட்டி' மேக்கிங் வீடியோ...!

Published : Aug 14, 2019, 06:43 PM IST
மிரள வைக்கும் 'சைரா நரசிம்ம ரெட்டி' மேக்கிங் வீடியோ...!

சுருக்கம்

தெலுங்கில், மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.  

மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தை, தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப்படத்தை தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழி நடிகர்களும் மிக முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

இந்த படத்தை பிரபல நடிகரும்,  சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜா தயாரித்துள்ளார்.  சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். குறிப்பாக இப்படத்தில், அமிதாப்பச்சன், நடிகர் சுதீப், விஜய் சேதுபதி, ஜெகபதிபாபு, நயன்தாரா, தமன்னா, நிகாரிக, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நடிகை அனுஷ்காவும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். இந்த படத்தின் நாயகனாக சிரஞ்சீவி நடித்துள்ளார். இப்படம் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து மக்கள் செய்த புரட்சியை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று உண்மைகளை படமாக உருவாக்கி உள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப்பின் சிரஞ்சீவி, இந்த படத்தில் நடிப்பதால் தெலுங்கு ரசிகர்கள் இப்படத்தை மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக, இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி