Aditi shankar : முத்தையா இயக்கத்தில் உருவாகி உள்ள விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ள அதிதி ஷங்கர், இப்படத்தில் யுவனுடன் சேர்ந்து பாடல் ஒன்றையும் பாடி உள்ளார்.
கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான முத்தையா நடிகர் கார்த்தியுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் விருமன். இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வெளியான கொம்பன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் விருமன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இப்படத்தை 2டி நிறுவனம் சார்பாக சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே கார்த்தி நடித்த பருத்திவீரன், பையா, நான் மகான் அல்ல, பிரியாணி போன்ற படங்களுக்கு இசையமைத்த யுவன், தற்போது 5-வது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... நேரடி ஹிந்தி படத்தில் நடிக்கிறாரா சூர்யா? இயக்குனர் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்!
இந்த படத்தில் உள்ள மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், அது ஹீரோயின் தான். இப்படத்தின் மூலம் நடிகர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ள அவருக்கு, கார்த்தியுடன் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படத்தின் மூலம் ஹீரோயினாக மட்டுமின்றி பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார் அதிதி ஷங்கர். அவர் தனது முதல் பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து பாடி உள்ளார். விருமன் படத்திற்காக அதிதியும் யுவனும் சேர்ந்து பாடியுள்ள மதுர வீரன் என்கிற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் படவிழாக்களுக்கு தொடர்ந்து ஆப்சென்ட் ஆகும் விக்ரம்.. பின்னணியில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கா