கார்த்தி - அதிதி ஷங்கர் நடிக்கும் 'விருமன்' பட பூஜை! பல பிரபலங்கள் கலந்து கொண்ட வைரல் வீடியோ இதோ..!!

Published : Sep 08, 2021, 12:35 PM IST
கார்த்தி - அதிதி ஷங்கர் நடிக்கும் 'விருமன்' பட பூஜை! பல பிரபலங்கள் கலந்து கொண்ட வைரல் வீடியோ இதோ..!!

சுருக்கம்

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தற்போது ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் 'விருமன்' இந்த படத்தின் பூஜை வீடியோ தற்போது, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

கார்த்தி - அதிதி ஷங்கர் நடிக்கும் 'விருமன்' பட பூஜை! பல பிரபலங்கள் கலந்து கொண்ட வைரல் வீடியோ இதோ. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தற்போது ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் 'விருமன்' இந்த படத்தின் பூஜை வீடியோ தற்போது, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்தி - முத்தையா கூட்டணியில் 2015ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் கொம்பன், இந்த கூட்டணி நீண்ட இடைவேளைக்குப் பிறகு  ‘விருமன்’  என்ற படம் மூலமாக மீண்டும் இணைத்துள்ளனர். இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். 

இந்த படம் மூலமாக தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகிறார். அதிதி இடம்பெற்றுள்ள ‘விருமன்’ பட போஸ்டரை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா ‘அதிதி ஷங்கரை வரவேற்கிறேன்! நீ அனைவரது இதயங்களையும் வெல்லப் போகிறாய். கடவுள் ஆசிர்வதிக்கட்டும். உன் வரவு நல்வரவு ஆகுக’ என்று கூறி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். தன்னுடைய மகளுக்கு வாழ்த்து தெரிவித்த, சூர்யாவுக்கு ஷங்கரும் தன்னுடைய நன்றியை கூறி ட்விட் செய்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் பூஜை மிக பிரமாண்டமாக நடந்துள்ளது. இதில்  ஷங்கர் ,சிவகுமார், சூர்யா, கார்த்தி, அதிதி ஷங்கர், பாலா, உள்பட பலரும் கலந்து கொண்டனர்,இந்த படத்தின் பூஜை மற்றும் இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் குறித்த வீடியோவை 'விருமன்' படத்தை தயாரிக்கும்  2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அந்த வீடியோ அனைவர் மத்தியிலும் மிகவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!