பிரபல பாடலாசிரியர் மரணம்... அதிர்ச்சியில் திரைபிரபலங்கள்..!!

By manimegalai aFirst Published Sep 8, 2021, 11:02 AM IST
Highlights

பிரபல பாடலாசிரியரும் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆரால் தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் நியமிக்கப்பட்டவர் புலமைபித்தன் உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

பிரபல பாடலாசிரியரும் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆரால் தமிழக அரசின் அரசவை கவிஞராகவும் நியமிக்கப்பட்டவர் புலமைபித்தன் உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புலமைப்பித்தனின் இயற்பெயர் ராமசாமி,  அக்டோபர் 6, 1935 பிறந்த இவர், 1968 இல் வெளியான குடியிருந்த கோயில் படத்தில் எழுதிய நான் யார் நான் யார் என்ற பாட்டிற்காக மிகவும் புகழ் பெற்றவர்.  1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தவருக்கு, முதல் வேலையாக கிடைத்தது என்னவோ சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றுவது தான். 

அரசியல் மீது தீவிர பற்று konஇவர் தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் "அரசவைக் கவிஞராகவும்" நியமிக்கப்பட்டார். இவர் எம். ஜி. ஆரின் நெருங்கிய நண்பரும் ஆவார். தமிழக அரசின் பெரியார் விருதை பெற்றுள்ள இவர், நான்கு முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருதையும் பெற்றுள்ளார். 100 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவரது பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காதவை.

85 வயதான இவர், கடந்த வாரம் உடல்நல குறைவு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் தற்போது நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லப்படும் என தெரிவிக்க பட்டுள்ளது. இறுதி சடங்குகள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

click me!