
தமிழில் நடிகர் கார்த்தி உடன் பிரியாணி படத்தில் நடித்தவர் நடிகை லீனா மரியா பால், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர். இவர் மோகன்லாலின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பெங்களூருவில் பல் மருத்துவராகப் பயிற்சி பெற்ற லீனா, சினிமா மீது கொண்ட மோகம் காரணமாக திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். அதை விடவும் இரட்டை இலை சின்னம் பெற லஞ்ச கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகருடன் இணைந்து பல மோசடி வழக்குகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
தற்போது கொச்சியில் வசித்து வரும் லீனா, அங்கு பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் முன்னாள் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் விளம்பரதாரர் ஷிவந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் இருந்து பணம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ரூ.200 கோடி கொள்ளை மோசடியில் சுகேஷ் சந்திர சேகர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரின் காதலியான லீனாவை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று கைது செய்யப்பட்ட லீனா மரியா பாலை, டெல்லி கோர்ட்டு 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது. அதோடு 5 நாட்கள் காவல்துறை விசாரணையில் எடுத்து விசாரிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.