இன்று, தமிழ் சினிமாவில்... கற்பனைக்கு அப்பாற்பட்ட கதைகளை இயக்கி, முன்னணி இயக்குனராக, ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளவர் இயக்குனர் செல்வராகவன். புலி 8 அடி பாய்ந்தால்... குட்டி 16 அடி பாயும் என நிரூபித்து அவருடைய தந்தை கஸ்தூரி ராஜாவிற்கு பெருமை சேர்ந்து வருகிறார்கள், அண்ணன் செல்வராகவனும் - தம்பி தனுஷும்.
இன்று, தமிழ் சினிமாவில்... கற்பனைக்கு அப்பாற்பட்ட கதைகளை இயக்கி, முன்னணி இயக்குனராக, ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளவர் இயக்குனர் செல்வராகவன். புலி 8 அடி பாய்ந்தால்... குட்டி 16 அடி பாயும் என நிரூபித்து அவருடைய தந்தை கஸ்தூரி ராஜாவிற்கு பெருமை சேர்ந்து வருகிறார்கள், அண்ணன் செல்வராகவனும் - தம்பி தனுஷும்.
மேலும் செய்திகள்: 17 வருடத்திற்கு பின்... மீண்டும் மன்மதராசா பாடலுக்கு ஆட்டம் போட்ட சாயா சிங்! இதுதான் பிறந்தநாள் ட்ரீட்: வீடியோ
'துள்ளுவதோ இளமை' படத்தில் துவங்கியது செல்வராகவனின், இயக்குனர் பணியும்... தனுஷின் நடிகர் பயணமும். இளவட்ட ரசிகர்களை நம்பி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு, ஏகப்பட்ட வரவேற்பும், பாராட்டுகளும் கிடைத்தது. முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய படத்தின் மூலம் கவர்ந்தார் இயக்குனர் செல்வராகவன்.
மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து இயக்குநராக தனது வித்தியாசமான கதை சொல்லும் விதம் மூலம் தனக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள்: 18 + மட்டும் பார்க்கவும்! உடலில் ஒட்டு துணி இன்றி... டார்ச் லைட் ஒளியில் எடுத்த வீடியோவை வெளியிட்ட நடிகை!
இந்த படத்தை தொடர்ந்து வெளியான 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', இரண்டாம் உலகம்', போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை என்றாலும் கற்பனைக்கு அப்பாற்பட்ட கதைகளாக அமைந்தது. மேலும் அடுத்ததாக எப்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இணைந்து நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய 14 வயது பாகைப்படம் ஒன்றை வெளியிட்டு... மிகவும் உருக்கமாக அவரே... அவருக்கு எழுதியுள்ள கடிதம் நெஞ்சை உருக வைத்துள்ளது.
.
இந்த கடிதத்தில் எழுதியுள்ளதாவது... ''அன்புள்ள செல்வா, 14 வயதில் உன் தோற்றத்தை பார்த்து இந்த உலகம் சிரித்தது. காரணம் உன் கண் குறைபாடு .
மேலும் செய்திகள்: 'காக்க காக்க' படத்தின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்! சூர்யாவுடன் ஜோரா நிற்கும் இந்த நடிகை யார் தெரியுமா?
எங்கே நீ சென்றாலும் உன்னை வேறுமாதிரி பார்த்தனர். சிலர் கிண்டல் செய்தனர். இதனை நினைத்து, நீ ஒவ்வொரும் இரவும் அழுதிருக்கிறாய். சில நேரங்களில் கடவுளிடம், ஏன் எனக்கு மட்டும் இப்படி? கண்ணை எடுத்து கொண்டாய் என கேள்வி எழுப்பி இருக்கிறாய். ஆனால் கவலைப்படாதே செல்வா, சரியாக 10 வருடங்களுக்கு பிறகு நீ ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்குவாய். அது உன் வாழ்க்கையை மாற்றும். அப்பொழுது இந்த உலகம் உன்னை திரும்பி பார்க்கும்.
மரியாதையுடனும் போற்றுதலுடனும் பார்க்கும். அடுத்த பத்து வருடங்களில் தமிழ் சினிமாவின் வரலாற்றில் டிரெண்ட் செட்டராக நீ பார்க்கப்படுவாய். மக்கள் உன்னை ஜீனியஸ் என்று அழைப்பார்கள். இப்பொழுது மக்கள் உன்னை பார்ப்பார்கள். ஆனால் உன் சிறுவயதில் கவலைக் கொள்ளச் செய்த கண்ணிற்காக அல்ல. நீ உருவாக்கிய படங்களின் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றிய ஒருவனை பார்ப்பார்கள்.
மேலும் செய்திகள்: அசிங்கமாக நடந்த உறவினர்! மகள் கண்ட அதிர்ச்சி... தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறிய லட்சுமி ராமகிருஷ்ணன்!
அதனால் தைரியமாக இரு. கடவுள், உன்னிடம் இருந்து விலை மதிக்க முடியாத ஒன்றை எடுத்துக்கொண்டால், அவர் உன்னிடம் மிகுதியாக திருப்பி அளிப்பார். அதனால் உற்சாகமாக இரு. புகைப்படங்கள் எடுக்கும் போது சிரி ( நீ சிரித்துக்கொண்டிருக்கும் படியான புகைப்படங்களை எப்பொழுதும் பார்த்தது இல்லை) ஏனெனில் பின் நாட்களில் உன்னை அதிக புகைப்படங்கள் எடுக்கப்பட வேண்டியிருக்கும். உன்னை நேசி. - இயக்குநர் செல்வராகவன் (வயது 45)'' என்று தெரிவித்துள்ளார்.
A post shared by Selvaraghavan (@selvaraghavan) on May 18, 2020 at 4:03am PDT