இயக்குனர் சக்தி சிதம்பரம் மீது குற்றவியல் போலீசாரிடம் புகார்...!

 
Published : Apr 05, 2018, 01:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
இயக்குனர் சக்தி சிதம்பரம் மீது குற்றவியல் போலீசாரிடம் புகார்...!

சுருக்கம்

director sakthi chithambaram cheeting money

தற்போது சார்லின் சாப்ளின் இரண்டாம் பாகத்தை மும்புரமாக இயக்கி வருகிறார் இயக்குனர் சக்தி சிதம்பரம். இவர் மீது சினிமா பைனான்சியர் பியாரிலால் குந்தச்சா என்பவர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

சக்தி சிதம்பரம்:

சாம்ராட், கோவை பிரதர்ஸ், இங்கிலீஷ்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சக்தி சிதம்பரம். தற்போது நடிகர் பிரபுதேவா மற்றும் பிரபுவை வைத்து 'சார்லி சாப்ளின் 2' படத்தை இயக்கி வருகிறார். 

ஜெயிக்கிற குதிரை:

இவர் ஏற்கனவே இயக்கிய 'ஜெயிக்கிற குதிரை' திரைப்படம் ஒரு சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில் சினிமா பைனான்சியர் பியாரிலால் குந்தச்சா என்பவர் குற்றப்பிரிவு போலீசாரிடம் இவர் மீது புகார் கொடுத்துள்ளார். 

புகார்:

இந்த புகாரில் அவர் கூறியுள்ளது, ஜெயிக்கிற குதிரை படத்தை நான் தான் முதலில் தயாரித்தேன். இதற்காக 47 லட்சம் செலவு செய்தேன். பின்பு இந்த படத்தை உரிமையை சக்தி சிதம்பரமே பெற்றுக்கொண்டு நான் செலவு செய்த படத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக தெரிவித்து 10 லட்சம் ரூபாய் கொடுத்தார். 

மீதி பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால் ராஜஸ்தானுக்கு ஓடிவிடு என்று மிரட்டுகிறார் என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் ஒன்று சேர்ந்த பழனிவேல் – சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!
ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கார்த்திக்; சந்திரகலா ஷாக், சாமுண்டீஸ்வரி ஹேப்பி; கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!