திமுகவிலும் இன்றுவரை சாதி பாகுபாடு பெரும் சவாலாக இருந்து வருகிறது; பா. ரஞ்சித் டுவீட்!!

By manimegalai a  |  First Published Jul 3, 2023, 11:04 AM IST

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் 'மாமன்னன்' படம் குறித்து, இயக்குனர் பா.ரஞ்சித் போட்டுள்ள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 


தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வந்தாலும், தன்னுடைய படங்களில் சாதி ரீதியான கருத்தையே அதிகம் பேசி வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' , மற்றும் 'கர்ணன்' ஆகிய படங்களில் இரு வேறு சாதிகளுக்கு இடையே காட்டப்படும் ஏற்ற தாழ்வுகளையே படமாக்கி இருந்த நிலையில், தன்னுடைய மூன்றாவது படமாக தற்போது ரிலீசாகி இருக்கும், 'மாமன்னன்' படமும் இதே கருத்தை தான் வலியுறுத்தி உள்ளது.

ஆனால் இந்த படத்தில், அரசியல் போராட்டம் குறித்து பேசியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த படத்தில், நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஹீரோவாக நடித்துள்ளார். இதுவே தன்னுடைய கடைசி படம் என இவர் அறிவித்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் சற்று அதிகமாகவே இருந்தது.

Latest Videos

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மகன்களுடன் மொட்டை போட்டு... மனம் உருகி பிரார்த்தனை செய்த தனுஷ்!

படமும் வெளியான நாள் முதலே ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதத்தில், தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் இப்படம் குறித்து, போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தன்னுடைய சமூக வலைத்தளத்தில் 'மாமன்னன்' படம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளதாவது, "மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. 

செம்ம கியூட்..!முதல் முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சரவணன் மீனாட்சி ரியல் ஜோடி... செந்தில் - ஸ்ரீஜா!

உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று #மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின்,  திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
 

மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.…

— pa.ranjith (@beemji)

 

click me!