Maaveeran Pre Release: சீன் ஆ.. சீன் ஆ.. பாடலுக்கு அதிதி ஷங்கருடன் குத்தாட்டம் போட்ட சிவகார்த்திகேயன்! வீடியோ

By manimegalai a  |  First Published Jul 3, 2023, 9:08 AM IST

சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள, 'மாவீரன்' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 



சிவகார்த்திகேயன் நடிப்பில், ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ள 'மாவீரன்' படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி, நேற்று நடந்த நிலையில்...  இதில் சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கர் உடன் மேடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூலை 14ஆம் தேதி ரிலீசாக உள்ள திரைப்படம் 'மாவீரன்'. இந்த படத்தை, தன்னுடைய முதல் படமான மண்டேலா படத்திற்கே தேசிய விருதை வாங்கிய இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, நடிகை அதிதி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில், மிஷ்கின் அரசியல்வாதியாகவும், வில்லனாகவும் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக பழம்பெரும் நடிகை சரிதா நடித்துள்ளார்.

Anna 😍🥵🔥 pic.twitter.com/vlWXc8zHMB

— Prasanth (@Itz_PrasanthSK)

Tap to resize

Latest Videos

செம்ம கியூட்..!முதல் முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சரவணன் மீனாட்சி ரியல் ஜோடி... செந்தில் - ஸ்ரீஜா!

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு, தமிழில் 'மாவீரன்' என்றும் தெலுங்கில் 'மாவீருடு'  என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆடை, மண்டேலா, போன்ற படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் 'மாவீரன்' படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து இதுவரை வெளியாகி உள்ள அனைத்து பாடல்களும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Scene ah Scene Ah...!!🥳🔥 pic.twitter.com/blV6JNknP3

— ` (@SKTamil01)

வாரவாரம் இப்படியே கேட்டா எப்படி? ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் குறித்து வீடியோ வெளியிட்ட படக்குழு!

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம்,  இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட உள்ள நிலையில், இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. நேற்று வெளியான , மாவீரன் படத்தின் டிரைலருக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில்,  ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் குறித்த வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் வந்த போது, பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்ட வீடியோவும், இப்படத்தில் இடம்பெற்ற சீன் ஆ.. சீன் ஆ...  பாடலுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் இருவரும் மேடையில் குத்தாட்டம் போட்ட டான்ஸ் வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Vibe Check : 100 RETWEETs Possible For This Sheer Fanbase ??🦁🔱❤️‍🔥 pic.twitter.com/mRur3SOBh6

— Maaveeran (@SK_Extremist)

 

click me!