
‘தரமணி’, ‘கற்றது தமிழ்’, ‘பேரன்பு’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். ‘தரமணி’ திரைப்படத்திற்குப் பின்னர் இயக்குனர் ராம் நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோரை வைத்து ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தை இயக்கி இருந்தார். பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று வரும் இந்த திரைப்படம் இன்னமும் திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மிர்ச்சி சிவாவை ஹீரோவாக வைத்து ‘பறந்து போ’ என்கிற படத்தை ராம் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் நடிகை அஞ்சலி, ‘கும்பளங்கி நைட்ஸ்’ திரைப்பட நடிகை கிரேஸ் ஆண்டனி, பாடகர் விஜய் யேசுதாஸ், மாஸ்டர் மிதுல் ரயான், நடிகர் அஜுவர்கிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். படம் வருகிற ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதிக பிடிவாத குணம் கொண்ட பள்ளி சிறுவனும், பணத்தின் மீது அதிக ஆசை கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையில் இருந்து விலகி பயணம் மேற்கொள்ளும் ரோட் டிராமாவாக இந்த படம் உருவாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.