இயக்குனர் மாரி செல்வராஜை கலங்க வைத்த உயிரிழப்பு!! இதயம் நொறுங்கிட்டதாக அவரே புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்!!

Published : Sep 05, 2021, 12:20 PM IST
இயக்குனர் மாரி செல்வராஜை கலங்க வைத்த உயிரிழப்பு!! இதயம் நொறுங்கிட்டதாக அவரே புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்!!

சுருக்கம்

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் 'கர்ணன்'. இந்நிலையில் இந்த படத்தில் அனைவரையும் கவர்ந்த குதிரை இறந்து விட்டதாக, இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.  

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் 'கர்ணன்'. இந்நிலையில் இந்த படத்தில் அனைவரையும் கவர்ந்த குதிரை இறந்து விட்டதாக, இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

அசுரன் படத்திற்கு பின், தனுஷ் நடிப்பில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படமாக உருவாகி இருந்தது, 'கர்ணன்'. 1995ஆம் ஆண்டு நடந்த கொடியன்குளம் பிரச்னையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. உண்மை சம்பவங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும் என்பதை இந்த படமும் உறுதி செய்து. அதே போல் நடிகர் தனுஷின் எதார்த்தமான நடிப்பும் கண்கலங்க வைத்தது என்றே கூறலாம்.

மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தையும் இப்படம் பெற்று தந்தது. இந்நிலையில், இந்த படத்தில் நடித்திருந்த அலெக்ஸ் என்கிற குதிரையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டோம். இந்த படத்தின் இறுதியில் இந்த குதிரை தான் தனுஷை அழைத்து வந்து படத்தில் மிகப்பெரிய திருமுனையை ஏற்படுத்தும். இந்த குதிரை தற்போது இறந்து விட்டது என்கிற தகவலை கனத்த இதயத்துடன், இதயம் உடைந்த எமோஜியை பதிவிட்டு தெரிவித்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

'கர்ணன்' படப்பிடிப்பின் போது, நடிகர் தனுஷ் முதல் அனைவருமே அலெக்ஸ் குதிரையுடன் மிகவும் நெருக்கமாக பழகியுள்ளனர். எனவே இந்த குதிரையின் இழப்பு அவர்களால் எளிதில் ஏற்கமுடியாது ஒன்றே...
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்
பாக்ஸ் ஆபிஸ் ‘பாட்ஷா’ ரஜினிகாந்த் நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 7 மூவீஸ் ஒரு பார்வை