செம்ம கெத்தா.. கால் மேல் கால் போட்டுகொண்டு செவிலியர்களுடன் 'சத்திரியன்' படம் பார்த்த விஜயகாந்த்! வைரல் ட்விட்!

Published : Sep 05, 2021, 11:25 AM ISTUpdated : Sep 05, 2021, 11:28 AM IST
செம்ம கெத்தா.. கால் மேல் கால் போட்டுகொண்டு செவிலியர்களுடன் 'சத்திரியன்' படம் பார்த்த விஜயகாந்த்! வைரல் ட்விட்!

சுருக்கம்

சமீபத்தில் தான் தன்னுடைய 69 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்த, நடிகரும், தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த், உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக தற்போது துபாய் சென்றுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் துபாயில் இருந்த படி செம்ம கெத்தாக இவர் போட்டுள்ள பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

சமீபத்தில் தான் தன்னுடைய 69 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்த, நடிகரும், தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த், உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக தற்போது துபாய் சென்றுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் துபாயில் இருந்த படி செம்ம கெத்தாக இவர் போட்டுள்ள பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

எம்ஜிஆருக்கு பின்னர் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நடிகர் என்றால் அந்த பெருமை விஜயகாந்த்தையே சேரும். சிம்ம குரலுக்கு சொந்தக்காரரான விஜயகாந்த், தனது அடுக்குமொழி வசனத்தால் ரசிகர்களை கவர்ந்து அதை வாக்கு அரசியலாக மாற்றி எதிர்க்கட்சித் தலைவராக உயரும் அளவிற்கு சாதனை படைத்தவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் சரியாக பேச முடியாத நிலைமைக்கு ஆளாகி உள்ளார். பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று அவருக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது சீரான உடல்நிலையுடன் விஜயகாந்த் இருந்தாலும், அவ்வப்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மாதாந்திர உடல் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எந்த ஒரு வெளிநாடுகளுக்கும் உடல் பரிசோதனைக்காக செல்லாமல் இருந்த விஜயகாந்த், கடந்த மாதம் தன்னுடைய மகனுடன் திடீர் என துபாய் பறந்தார்.

அங்கு லண்டனை சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் விஜயகாந்த் அவர்களுக்கு, நடைபயிற்சி மற்றும் பேச்சுப் பயிற்சி கொடுப்பதற்காக, துபாய் வர உள்ளதாகவும், மேலும் விஜயகாந்துக்கு அங்கு உடல் பரிசோதனை செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படமும், வார்த்தைகளுக்கும் இவருடைய ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனர்ஜி டானிக்காக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருதும் இல்லை.

கண்களில் கூலிங் கிளாஸ், செம்ம ஸ்டைலிஷாக டி- ஷர்ட் அணிந்தபடி, கெத்தாக கால் மேல் கால் போட்டு கொண்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் "நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த, 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவும் இவருடைய புகைப்படமும் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!