லோகேஷ் வழங்கும் விஜயகுமாரின் "Fight Club".. பிராட் பிட் நடித்த அந்த படத்தின் கதையா? தீயாய் பரவும் தகவல்!

By Ansgar RFirst Published Nov 30, 2023, 8:47 AM IST
Highlights

Lokesh Kanagaraj's Fight Club : பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெகு சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார் என்று கூறினால் அது மிகையல்ல. இந்நிலையில் அவர் தற்போது தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகம் செய்துள்ளார். 

கடந்த 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டு வெளியான உறியடி மற்றும் உறியடி 2 ஆகிய திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகர் தான் விஜயகுமார். தனது முதல் படத்தின் மூலமே மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஒரு சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் அவர் தமிழ் சினிமாவில் வளம்வந்துகொண்டிருக்கிறார்.

Latest Videos

தனது முதல் திரைப்படத்திலேயே அறிமுக இயக்குனராக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இவருக்கு, ஆனந்த விகடன் சினிமா விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. இறுதியாக சுதா கொங்கராவின் சூரரை போற்று திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய விஜயகுமார் தற்பொழுது நாயகனாக களம் இறங்கியுள்ளார். ஆனால் இம்முறை அவர் அந்த திரைப்படத்தை இயக்கவில்லை.

காலேஜ் ஸ்டுடென்டாக மாறிய "ராஜாக்கண்ணு".. பரபரப்பாக நடந்து முடிந்த படப்பிடிப்பு - ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ் இதோ!

இயக்குனர் அப்பாஸ் ரஹ்மத் என்பவர் இயக்கத்தில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக தனது "ஜி ஸ்குவாட்" தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்க உள்ள திரைப்படமான "ஃபைட் கிளப்" என்கின்ற திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கவிருக்கிறார் விஜயகுமார். 

இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு டேவிட் பிஞ்சர் என்பவர் இயக்கத்தில் பிரபல நடிகர் பிராட் பிட் மற்றும் எட்வர்ட் நடிப்பில் வெளியான ஃபைட் கிளப் என்கின்ற திரைப்படத்தை தழுவி தான் இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த திரைப்படம் அதே பெயரில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு வெளியான ஒரு திரைப்படமாகும்.

கண்ணழகி சார் அவங்க.. பிரபல நடிகை சிவரஞ்சனியை நியாபகம் இருக்கா? வாரிசு பட நடிகரின் மனைவி தான் இவங்க!

Insomniac என்கின்ற தூக்கமின்மை நோயால் அவதிப்படும் நாயகன், தன் வாழ்க்கை முறை மற்றும் தனது வேலை மீது கொண்ட அதிருப்தியின் காரணமாக சில தவறான வழியில் செல்வதன் மூலம் தனக்கு இருக்கும் நோயை எதிர்கொள்ள நினைக்கின்றார். அதன்பிறகு அவருக்கு வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை கூறும் கதை தான் அந்த கதை. லோகேஷ் தயாரிக்க இருக்கும் இந்த கதையும், அதுவாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!