Jigarthanda 2 : ‘ஜிகர்தண்டா 2’ ஆரம்பிக்கலாங்களா.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ் - ஹீரோ இவரா?

Published : Aug 01, 2022, 01:40 PM IST
Jigarthanda 2 : ‘ஜிகர்தண்டா 2’ ஆரம்பிக்கலாங்களா.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ் - ஹீரோ இவரா?

சுருக்கம்

Jigarthanda 2 : ஜிகர்தண்டா படம் ரிலீசாக இன்றுடன் 8 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்.

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசான படம் ஜிகர்தண்டா. சித்தார்த் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் நடிகர் பாபி சிம்ஹா கேங்ஸ்டராக மிரட்டி இருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்திருந்த இப்படம் கடந்த 2014-ம் ஆண்டு இதே தினத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி இதில் அசால்ட் சேதுவாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அத்துடன் இப்படத்தின் எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு தேசிய விருது கிடைத்தது.

இவ்வாறு இரண்டு தேசிய விருதுகளை வென்ற இப்படம் அடுத்ததாக இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடித்திருந்தார். அங்கு பச்சன் பாண்டே என்கிற பெயரில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரிலீசான இப்படம் போதிய வரவேற்பை பெறாமல் பிளாப் ஆனது.

இதையும் படியுங்கள்... Bachchhan Paandey Public Review : ஜிகர்தண்டா இந்தி ரீமேக்.. கலவையான விமர்சங்களை பெற்ற அக்‌ஷய் குமார்

இந்நிலையில், ஜிகர்தண்டா படம் ரிலீசாக இன்றுடன் 8 வருடங்கள் ஆகும் நிலையில், இதற்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அதில் ஜிகர்தண்டா படத்தின் மேக்கிங் காட்சிகள் சிலவற்றை சேர்த்திருந்த அவர், இடையிடையே மதுரை பேமஸ் ஜிகர்தண்டா தயாரிப்பதையும் போட்டு இறுதியில் இரண்டு ஜிகர்தண்டா டேபிளில் இருப்பது போன்று முடித்து, அதன் இரண்டாம் பாகத்திற்கான பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது அப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த வீடியோவில் கார்த்திக் சுப்புராஜ் குறிப்பிட்டிருந்தார். முதல் பாகத்தை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தான் இப்படத்தையும் தயாரிக்க உள்ளதாகவும், சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்...  தலைவர் 169 படம் கைநழுவியதால் ரூட்டை மாற்றிய கார்த்திக் சுப்புராஜ்... புது கூட்டணியில் தயாராகிறது ஜிகர்தண்டா 2

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!