'சூரரை போற்று' ஓடிடி ரிலீஸ்... இங்கு இருந்தால் தான் மரியாதை, சூர்யாவுக்கு அறிக்கை வெளியிட்ட இயக்குனர் ஹரி!

By manimegalai aFirst Published Aug 25, 2020, 6:53 PM IST
Highlights

நடிகர் சூர்யாவை வைத்து சிங்கம் சீரிஸ், வேலு, ஆறு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி, சூர்யா தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

நடிகரும், தயாரிப்பாளருமான, சூர்யா தான் தயாரித்து நடித்துள்ள 'சூரரை போற்று' திரைப்படம் அணைத்து, பணிகளும் நிறைவடைந்து இன்னும் வெளியாகாமல் உள்ளதை கருத்தில் கொண்டு, அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகும் என விநாயகர் சதுர்த்தி அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்தார். 

இதில், கொரோனா நேரத்தை கருத்தில் கொண்டு, நடிகராக யோசிக்காமல் தயாரிப்பாளராக யோசிப்பதாக தெரிவித்திருந்தார். இவரின் இந்த முடிவுக்கு தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவரும் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் சூர்யாவை வைத்து சிங்கம் சீரிஸ், வேலு, ஆறு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி, சூர்யா தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, மதிப்பிற்குரிய சூர்யா அவர்களுக்கு வணக்கம்... “உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள்,  ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி. ஓடிடியில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைதட்டல்களால் தான், நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம்.


சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் தியேட்டர் என்கிற கோவிலில் இருந்தால் தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கும், உழைப்புக்கும் ஒரு அங்கீகாரம்.

தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால், சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்.” இவ்வாறு தன் அறிக்கையில் இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.
 

click me!