
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் தளபதி விஜய் - சங்கீதா தம்பதி இன்று தங்களுடைய 21வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து ட்விட்டரில் #SangeethaVijay என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் திருமண புகைப்படங்கள் மற்றும் அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
கோவில்களில் சிறப்பு பூஜை, ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம், கொரோனா நிவாரணம் என இந்த நல்ல நாளில் பல உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் பொன்னமராவதி அருகேயுள்ள வெள்ளையன் கவுண்டன் பட்டியைச் சேர்ந்த சுந்தரம் மற்றும் அன்னவாசலைச் சேர்ந்த சுகன்யா ஆகிய ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் மன்ற தலைவர் பர்வேஸ் தலையில் நிஜாம் காலனி பகுதியில் தளபதி ரசிகர்கள் புடை சூழ திருமணம் நடந்துள்ளது. அத்துடன் தங்களது சொந்த செலவில் தாலி, கட்டில், பீரோ, மெத்தை, கிரைண்டர் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என சீர்வரிசைகளையும் வழங்கி அசத்தியுள்ளனர். மேலும் புதுமண தம்பதிகளுக்கு சிறப்பாக விருந்து வாழ்த்து வயிறோடு சேர்த்து மனதும் குளிர புதுவாழ்க்கையை தொடங்க வழி அனுப்பியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.