Geetha Krishna : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் நடிகைகள்... பிரபல இயக்குனரின் பேச்சால் வெடித்த சர்ச்சை

By Asianet Tamil cinema  |  First Published May 27, 2022, 9:24 AM IST

Geetha Krishna : தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குனர் கீதா கிருஷ்ணாவிடம் தெலுங்கு திரையுலகில் நீங்கள் அறிமுகமான பின்பு நடந்த மாற்றங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 


தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர் கீதா கிருஷ்ணா. இவர் இயக்குனர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். தெலுங்கில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ள இவர், தமிழில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நிமிடங்கள் என்கிற படத்தை இயக்கினார்.

சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அவரிடம் தெலுங்கு திரையுலகில் நீங்கள் அறிமுகமான பின்பு நடந்த மாற்றங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தெலுங்கில் நிறைய நடிகைகள் குறுகிய காலத்திலேயே முன்னணி இடத்தை பிடிப்பதற்காக படுக்கையை பகிர கூட தயாராக இருக்கிறார்கள்.

Tap to resize

Latest Videos

நடிகைகள் இதுபோன்று படுக்கையை பகிர்வது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக ஸ்ரீ ரெட்டி போன்ற நடிகைகள் குரல் கொடுத்தனர். நிறைய நடிகைகள் சினிமாவில் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து பேசி வருகின்றனர். குறிப்பாக தெலுங்கு திரையுலகில் பல ஆண்டுகளாக இது நடந்து வருவதாக அவர் கூறி உள்ளார்.

இயக்குனர் கீதா கிருஷ்ணாவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பேசு பொருளாகவும் மாறி உள்ளது. அவரின் இந்த பேச்சுக்கு சிலர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இயக்குனர் ஒருவர் இவ்வாறு பேசி உள்ளது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.

இதையும் படியுங்கள்... Kamal Haasan : பான் இந்தியா படங்களின் ஆதிக்கம் குறித்து கமல் சொன்ன அல்டிமேட் பதில்

click me!