
சமீபத்தில் ரிலீஸான ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் முக்கிய பகுதிகள் குறிப்பாக வில்லனின் போர்சன்கள் அவ்வளவும் தனது தொடர் ஒன்றிலிருந்து திருடப்பட்டது. இந்த தமிழ்சினிமா இயக்குநர்களைத் திருட்டிலிருந்து திருத்தவே முடியாதா என்று அங்கலாய்த்திருந்தார் கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார்.
இதற்கு சற்றுதாமதாக பதிலளித்திருக்கும் இயக்குநர் கணேஷா, "கதை என்னுடையது என மற்றவர்களின் படங்களுக்கு உரிமை கோரும் பிரச்சினை தற்போது தமிழ் சினிமாவில் பேஷனாகி விட்டது. நான் சுமார் 25 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். பல்வேறு கஷ்டங்களைத் தாண்டி இப்போது தான் 2வது படம் இயக்கி உள்ளேன். இப்போது வந்து இது என்னுடைய கதை என உரிமை கோருவது சரியல்ல. நான் ‘திமிறு பிடிச்சவன்’தான். ஆனால் திருட்டுக்கதை பிடிக்கிறவன் அல்ல.
இப்படத்தின் கதை என்னுடையது தான் என்பதற்கு உரிய அனைத்து ஆதாரங்களையும் நான் வைத்திருக்கிறேன். நான் மதிக்கக்கூடிய எழுத்தாளர்களில் ஒருவர் ராஜேஷ் குமார். அவருடைய கதையை வைத்து நான் திமிரு புடிச்சவன் படத்தை எடுக்கவில்லை. நான் தெலுங்கில் ராஜமவுலியிடம் உதவியாளராக இருந்த போது, அவர் சிம்மாதிரி படம் எடுத்த காலத்திலேயே இந்த கதைக்கருவை பிடித்தேன். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து தான் அது படமாகி இருக்கிறது. சர்ச்கைகளின் மூலம் கிடைக்கும் வெற்றி எனக்கு வேண்டாம். எனது வெற்றி நேர்மையானதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். மேலும் இது பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை" என்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.