
கனடாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இசை நிகழ்ச்சியில் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கவிருப்பதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்துள்ளார். இச்செய்தியை சற்றுமுன்னர் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
.ஏ.ஆர்.ரகுமான் தனது குழுவினருடன் அடுத்த மாதம் டிசமபர் 24ம் தேதியன்று டொரண்டோவில் மிகப்பெரிய அளவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். இதில் அவருடன் டிரம்ஸ் சிவமணி, தமிழ் , இந்தி சினிமாவின் முன்னணிப் பாடகர்கள் உள்ளிட்ட ஏராளமான இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதன் டிக்கெட் விற்பனை ஆன் லைனில் துவங்கி சில நாட்கள் ஆகின்றன.
இந்நிலையில் சற்றுமுன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் ’டொரண்டோ நிகழ்ச்சியில் வசூலாகும் தொகையில் ஒரு பகுதி கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இந்நிகழ்ச்சியில் வசூலாகும் தொகை சில கோடிகளில் இருக்கும் என்பதால் ரகுமானிடமிருந்து ஒரு பெரும் தொகை கஜா நிவாரண நிதிக்கு கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஆனால் இத்தொகை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச்சேர இன்னும் 35 நாட்கள் காத்திருக்கவேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.