
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனுக்கு மிக அதிகமான அளவுக்கு ஆதரவு இருந்தாலும் லாஸ்லியா, கவின் காதல் விவகாரத்தில் அவர் பத்தாம் பசலியாக நடந்துகொண்டதாகவும், குறிப்பாக லாஸ்லியாவிடம் உடல்ரீதியாக நெருக்கம் காட்டியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் சில விமர்சனங்கள் இன்றுவரை இருந்துகொண்டே இருக்கின்றன. அதற்கு பதிலடியாக தனது முகநூல் பக்கத்தில் ஒரு தில்லாலங்கடி வேலையில் இறங்கியிருக்கிறார் அவர்.
பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறியதும் ட்விட்டர், முகநூல் பக்கங்களில் மெல்ல நடமாடத் துவங்கியிருக்கும் சேரன் சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில்,...இனிய நட்புகளுக்கு வணக்கம்... கிட்டத்தட்ட 91 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் ஒருவனாக இருந்தேன்.உங்கள் வீட்டில் ஒருவனாக ஆக்கிக் கொண்டீர்கள். பெரும் நன்றி!
நான் உள்ளே இருந்த போதும், வெளியே வந்த பிறகும் உங்களுக்கு நிறைய கேள்விகள் என்னிடம் கேட்கத் தோணியிருக்கலாம்.அதைக் கேட்கலாம் இப்போது... எனது உள்பெட்டிக்கு (இன்பாக்ஸிற்கு ) அந்தக் கேள்வியை அனுப்பி வையுங்கள். தேவையற்ற கேள்விகளைத் தவிர்த்து பிறருக்கும் பயன்படும் வகையில் உங்கள் கேள்விகளை எதிர் பார்க்கிறேன். பிக்பாஸ் சம்பந்தப்பட்ட கேள்விகளாக மட்டும் இருக்கட்டும்.❤தகுதியுடைய கேள்விகளுக்கு காணொளி (வீடியோ) வடிவில் பதில் தர இருக்கிறேன். பின்னூட்டத்தில் கேள்விகளைத் தவிர்க்கவும். நன்றி...என்று பதிவிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக வரக்கூடிய கேள்விகளில் லாஸ்லியாவுடம் நெருக்கம் காட்டிய விவகாரம் குறித்து அதிகம் கேள்விகள் வரும் என்று எதிர்பார்க்கும் அவர் மகள் என்ற உறவில் அவரைக் கட்டிப்பிடித்ததில் என்ன தவறு? என்று பதில் சொல்வதற்காகவே தனது சொந்த மகளைப் பாசத்துடன் அணைத்துள்ள படத்தை ப்ரொஃபைல் படமாக வைத்துள்ளார். அப்பா....அப்பப்பா...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.