பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக திரும்பிய கவின் ரசிகர்கள்! ஆர்ப்பரிக்கும் ஆர்மி!

Published : Sep 27, 2019, 01:23 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக திரும்பிய கவின் ரசிகர்கள்! ஆர்ப்பரிக்கும் ஆர்மி!

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ஆக அனைத்து தகுதிகளும் இருந்தும் , திடீர் என நேற்றைய தினம் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை எடுத்து கொண்டு, நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் கவின்.  

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ஆக அனைத்து தகுதிகளும் இருந்தும் , திடீர் என நேற்றைய தினம் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை எடுத்து கொண்டு, நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் கவின்.

சாண்டி, லாஸ்லியா, முகேன், தர்ஷன், ஷெரின் என அனைவரும் தடுத்தும், இந்த முடிவை நான் இப்போது எடுக்கவில்லை... எப்போதோ எடுத்து விட்டேன். இந்த வாரத்தின் இறுதியில் இதுபோன்ற வாய்ப்பு பிக்பாஸ் கொடுப்பர் என எதிர்பார்த்தேன். ஆனால் இப்போது 5 லட்சத்தோடு வாய்ப்பு கொடுத்துள்ளார் என பிடிவாதமாக இருந்து வெளியேறினார்.

கவினின் இந்த துணிச்சலான முடிவு அனைவரையும் அதிர்ச்சியாக்கியது. கடைசி நேரத்திலாவது கவின் தன்னுடைய முடிவை மாற்றி கொள்வாரா என போட்டியாளர்கள் மற்றும் மக்கள் எதிர்பார்த்த நிலையில், கவின் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில், கவினின் ரசிகர்கள் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக திரும்பியுள்ளனர். கவின் இந்த நிகழ்ச்சியில் இல்லாததால் இனி நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்று சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். மேலும் பிக்பாஸ் சீசன் 3 டைட்டிலை பெற, தகுதியுள்ளவர் கவின் என அவருடைய ஆர்மி ஆர்ப்பரித்து வருகிறார்கள்.

மேலும்,  பிக்பாஸ் போட்டியாளராக இருந்த நடிகை வனிதா, கவின் வெளியேறியது குறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில், கவினின் இந்த முடிவிற்கு சல்யூட் செய்வதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு