வாழை படத்தை பார்த்த இயக்குனர் பாலா, படம் முடிந்ததும் மிகவும் எமோஷனலாகி மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த மாரி செல்வராஜ், அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் வாழை. இப்படத்தை இயக்கியதோடு மட்டுமின்றி அதில் தன் மனைவியை தயாரிப்பாளராகவும் அறிமுகப்படுத்தி உள்ளார். வாழை திரைப்படம் மாரி செல்வராஜின் பயோபிக் படமாகும். அவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை தான் படமாக எடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
வாழை படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 23-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அதற்கு முன்னரே வாழை படத்தின் சிறப்பு காட்சியை தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பான்மையான இயக்குனர்களுக்கு திரையிட்டு காட்டி அவர்களின் பாராட்டுக்களை பெற்றிருக்கிறார் மாரி செல்வராஜ்.
இதையும் படியுங்கள்... இதனால தான் தளபதி விஜய் இன்று தவெக கொடியை அறிமுகம் செய்தாரா?
மணிரத்னம், வெற்றிமாறன் தொடங்கி நெல்சன், விக்னேஷ் சிவன் வரை அப்படத்தை பார்த்து பாராட்டாத இயக்குனர்களே இல்லை. அந்த அளவுக்கு வாழை படத்துக்கு பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், அப்படத்தை இயக்குனர் பாலாவிடம் திரையிட்டுக் காட்டி இருக்கிறார் மாரி செல்வராஜ். படம் பார்த்து முடித்ததும் எமோஷனலான பாலா, மாரி செல்வராஜை ஆரத்தழுவி அவருக்கு அன்பு முத்தத்தை பரிசாக கொடுத்துள்ளார்.
படத்தின் கிளைமாக்ஸ் பார்த்து மிரண்டு போன பாலா, அதிலிருந்து மீள முடியாமல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு வந்து மாரி செல்வராஜை கட்டிப்பிடித்த வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலா இயக்கத்தில் தற்போது வணங்கான் திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ளார். அப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.
◼️ Hugged And Kissed After Watched 😥💙 pic.twitter.com/uCwgVtxz2p
— Filmy_Enthusiast 👽 (@Pradeep_HarshaX)இதையும் படியுங்கள்... தளபதி போட்ட தடபுடல் விருந்து... கட்சி கொடி அறிமுக விழாவிற்கு வந்த நிர்வாகிகளுக்கு வயிறு முட்ட உணவளித்த விஜய்!