தங்களது குழந்தைக்கு பெயர் வைத்த இயக்குநர் அட்லி - பிரியா தம்பதி... என்ன பெயர் தெரியுமா?

By Narendran S  |  First Published May 7, 2023, 8:46 PM IST

இயக்குநர் அட்லீ தனது மகனுக்கு வைத்திருக்கும் பெயர் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. 


இயக்குநர் அட்லீ தனது மகனுக்கு வைத்திருக்கும் பெயர் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. குறுகிய காலத்தில் திரையுலகில் தனக்கென ஒரு தடம் பதித்த இயக்குநர்களில் ஒருவர் அட்லீ. மதுரையை சேர்ந்த அவர், தமிழ் திரையுலகில் இயக்கம், திரைக்கதை, எழுத்து என பலத்துறைகளில் கலக்கி வருகிறார். முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவரின் முதல் படமான ராஜா ராணி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் அவர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்

Tap to resize

Latest Videos

திரையுலக வாழ்க்கை இப்படி என்றால் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் தான் விரும்பிய சின்னத்திரை நடிகையான பிரியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர் தன் கணவருடன் எடுக்கும் புகைப்படம், வீடியோ என அனைத்தையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அவர் சமீபத்தில் கூட தங்களது திருமண நாள் கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் அட்லி தான் தந்தையான தகவலை பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழகத்தில் இனி திரையிடப்படாது என அறிவிப்பு - காரணம் என்ன?

அதை தொடர்ந்து சமீபத்தில் அட்லீ – பிரியாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருந்த நிலையில் அந்த பதிவு வைரலானது. இதற்கிடையே தனது மகனுக்கு அட்லீ வைத்துள்ள பெயர் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. அட்லீ தன் மகனுக்கு மீர் என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி தங்கள் மகன்களுக்கு உயிர் மற்றும் உலக் என்று பெயர் வைத்து இருந்தது சமூக வலைத்தளத்தில் பேசுபொருளான நிலையில் தற்போது இந்த பெயரும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya Mohan (@priyaatlee)

click me!