கொட்டுக்காளியை தியேட்டரில் வெளியிட்டது தவறு - சிவகார்த்திகேயனை நேரடியாக விமர்சித்த அமீர்! ஏன்?

By Ansgar R  |  First Published Aug 27, 2024, 11:25 PM IST

Director Ameer : இயக்குனர் அமீர், அண்மையில் திரையரங்குகளில் வெளியான "கொட்டுக்காளி" திரைப்படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.


பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பில், கடந்த 2021ம் ஆண்டு வெளியான "Pebbles" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் தான் பி.எஸ் வினோத்ராஜ். பன்னாட்டு அளவில் பல விருதுகளை வென்றது அந்த படம். முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைகளத்தை தமிழ் திரையுலகத்திற்கு கொடுத்து, மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், வினோத்தின் இரண்டாவது திரைப்படத்தை தயாரித்து வெளியிட முன் வந்தார் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன். அந்த திரைப்படம் தான் சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி திரைப்படம். 

எஸ் கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் இந்த திரைப்படம் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி, பெர்லினில் நடந்த ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் வெளியானது. இன்றுவரை பல பன்னாட்டு விருதுகளை அந்த திரைப்படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி மாரிசெல்வராஜின் "வாழை" திரைப்படத்தோடு இணைந்து இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. சுமார் 1.40 மணி நேரம் ஓடும் இந்த திரைப்படம், திரையரங்குகளில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றே கூறலாம்.

Tap to resize

Latest Videos

தாய்மையால் ஐஸ்வர்யா ராய் வாழ்க்கை பாதிக்கப்பட்டதா?

அமீர் சொன்ன கருத்து..

இந்நிலையில் ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்ற இயக்குனரும், நடிகருமான அமீர், "கொட்டுக்காளி", திரைப்படம் குறித்து பேசியுள்ளார். நான் கொட்டுக்காளி திரைப்படத்தை எடுத்திருந்தால், நிச்சயம் அதை திரையரங்குகளில் வெளியிட்டிருக்க மாட்டேன். காரணம் ஏற்கனவே பல பன்னாட்டு திரைப்பட விழாக்களில் கொட்டுக்காளி திரைப்படம் பங்கேற்று, எண்ணற்ற விருதுகளை வென்றிருக்கிறது. 

"இது மெயின் ஸ்ட்ரீம் திரைப்படம் அல்ல, மாறாக இது ஒரு ஃபெஸ்டிவல் திரைப்படம். சிவகார்த்திகேயன் போன்ற அனுபவம் மிக்க ஒரு நடிகர், இந்த திரைப்படத்தை தயாரிக்கும் பொழுது அவர் இதை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்திருக்கக் கூடாது. மாறாக ஓடிடி தளங்களில் இதை விற்பனை செய்திருக்க வேண்டும்". 

"இப்போது திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை பார்க்கும் பலர் படத்தில், introduction இல்லை, சரியான இன்டெர்வல் பிளாக் இல்லை, பாடல்கள் இல்லை, சரியான கதை ஓட்டம் இல்லை, முடிவும் முழுமையாக இல்லை என்று பல குறைகளை கூறுகிறார்கள். ஆனால் ஒரு பெஸ்டிவல் திரைப்படத்தில் இதை எதிர்பார்ப்பது தவறு. ஆனால் மெயின் ஸ்ட்ரீட் திரைப்பட ரசிகர்களுக்கு அது புரியாது." 

"ஆகையால் அது அவர்களுடைய தவறு அல்ல கொட்டுக்காளி திரைப்படம் போன்ற கொண்டாடப்பட வேண்டிய திரைப்படங்களை திரைப்பட விழாக்களில் வெளியிட்டு பின் OTTயில் வெளியிடுவது தான் ஏற்புடையது" என்று அவர் சற்று காட்டமாகவே கூறியிருக்கிறார்.

Festival திரைப்படம் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை குறித்து, எந்தவித பொழுதுபோக்கு அம்சமும் இல்லாமல் எடுக்கப்படும் படமே Festival படங்கள். பெரும்பாலும் இவை திரையரங்குகளில் வெளியாகாது. 

அப்புறம் எல்லாரும் ரெடியா? கூலி பட அதிகாரப்பூர்வ அப்டேட்ஸ் - ஆட்டத்தை துவங்கும் லோகேஷ்!

click me!