குடிக்கு அடிமையானதால் பறிபோன உயிர்... நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்

By Ganesh A  |  First Published Aug 27, 2024, 8:08 AM IST

யூடியூப் மூலம் பேமஸ் ஆகி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கிய நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்.


யூடியூப்பில் தற்போது மிகவும் பிரபலமாக இருப்பவர் விஜே சித்து, அவர் ஆரம்ப காலகட்டத்தில் செய்த பிராங்க் வீடியோக்கள் மிகவும் பேமஸ் ஆனது. அந்த பிராங்க் வீடியோக்களில் முக்கிய பங்காற்றியவர் தான் பிஜிலி ரமேஷ். அந்த பிராங்க் வீடியோ மூலம் பிரபலமான அவருக்கு சினிமாவிலும் படிப்படியாக நடிக்க சான்ஸ் கிடைத்தது. அதை ஏற்று ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படம் மூலம் நடிகராக அறிமுகமானார் பிஜிலி ரமேஷ்.

இதையடுத்து ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், அமலா பால் உடன் ஆடை போன்ற படங்களில் நடித்த இவர், பின்னர் சின்னத்திரையில் டிரெண்டிங் ஆக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் கோமாளியாக களமிறங்கினார். இவரை வைத்து பாலா மற்றும் புகழ் இருவரும் செய்த காமெடி அட்ராசிட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் சீசனோடு ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார் பிஜிலி ரமேஷ்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... சுதா கொங்கரா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லன் லோகேஷ் கனகராஜ்... SK-வுக்கு ஜோடி யார் தெரியுமா?

அதன்பின் சினிமாவிலும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் அவரின் குடிப்பழக்கம் தான் என கூறப்படுகிறது. போதைக்கு அடிமையானதால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததோடு, உடல்நலனும் பாதிக்கப்பட்டது. அண்மையில் சிகிச்சைக்கு கூட பணமின்றி தவித்து வருவதாக யூடியூப்பில் கண்ணீர்மல்க பேட்டி அளித்திருந்தார் பிஜிலி ரமேஷ்.

இந்நிலையில், இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. பிஜிலி ரமேஷ் மறைவுக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... லோகேஷ் போடும் மாஸ்டர் பிளான்.. கூலி படத்தில் ஒரு மரண மாஸ் கேமியோ - எந்த நடிகர் தெரியுமா?

click me!