அல்டிமேட் ஹீரோக்களின் வாரிசுகளுடன் கைகோர்க்கும் கல்யாணி!: ஒரு நாயகி உதயமாகிறாள்...

Asianet News Tamil  
Published : Jul 10, 2017, 07:52 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
அல்டிமேட் ஹீரோக்களின் வாரிசுகளுடன் கைகோர்க்கும் கல்யாணி!: ஒரு நாயகி உதயமாகிறாள்...

சுருக்கம்

Dir priyadarshan daughter kalyani act Debut with akhil akkineni and pranav

தென்னிந்திய இயக்குநர்களின் திறமைகளை மிக சமீபத்தில்தான் அங்கீகரிக்க துவங்கியிருக்கிறது பாலிவுட். ஆனாலும் எப்போவோ இந்தி நாயகர்களின் விருப்ப இயக்குநர்கள் பட்டியலில் இணைந்து ஆச்சரியமூட்டியவர் மலையாள இயக்குநர் ப்ரியதர்ஷன். இப்பவும் வசீகரம் குறையாமலிருக்கும் நடிகை லிசியின் மாஜி கணவர். யெஸ்! இருவரும் சமீபத்தில்தானே விவாகரத்து செய்து கொண்டனர்.

இவர்களின் மகள் கல்யாணி (மலையாள செலிபிரெட்டிகள் தங்கள் மகளுக்கு எத்தனை அழகான தமிழ் பெயர் வைத்திருக்கிறார்கள்!). சீயானின் ‘இருமுகன்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த கல்யாணிக்கு அரிதார ஆசை. என்னதான் அப்பா இந்திய சினிமாவின் டார்லிங் இயக்குநர்களில் ஒருவராக இருந்தாலும் கூட சூழல் அவருக்கு சுகப்படுவதாக இல்லையே!

இந்நிலையில் லிசியை நாயகியாக அறிமுகம் செய்துவைக்க தமிழ் சினிமாவில் சில இயக்குநர்களை அணுகினாராம் லிசி! ஆனால் உதடு பிதுக்கிவிட்டனர் இவர்கள். விளைவு மல்லூவுட்டின் பக்கம் பார்வையை திருப்பினார் அடித்தது ஹாட் ஜாக்பாட்.

ஹிட் ஹாட் இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் புதிய படமான ‘ஆதி’யில்  நாயகியாக ஒப்பந்தம் ஆகிறார் கல்யாணி, அதுவும் மோகன்லாலின் மகன் ப்ரணவ் இதில் ஹீரோ என்பது சான்ஸே இல்ல! தகவல்.

இது மட்டுமா தெலுங்கில் நாகார்ஜூனாவின் மகன் அகில் நாயகனாக நடிக்கவுள்ள படத்திலும் கல்யாணிதான் ஹீரோயினாம்.

தென்னிந்திய சினிமாவின் இரண்டு மொழிகளின் அல்டிமேட் ஹீரோக்களின் மகன்களுடன் தன் மகள் ஹீரோயினாவதை நினைத்து லிசி சந்தோஷத்தில் செம பிஸி.

கல்யாணி கலக்குமா நீ!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'போக்கிரி' படப்பிடிப்பில் வெடித்த மோதல் - 19 ஆண்டுகளாக பகையை சுமக்கும் விஜய் !
ரஜினியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன சிவாஜி! நடிகர் திலகம் உருகி பார்த்த ரஜினி படம் எது தெரியுமா !