
அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தருணம்... எலிமினேஷன் முதல் வாரத்தில் நடிகை அனுயா வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது வாரமான எலிமினேஷனாக நடிகர் கஞ்சா கருப்பு எலிமினேட் செய்யப்பட்டார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத போட்டியாளர்கள், கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் இவர்களுடைய கோபம் ஓட்டு மொத்தமாக பரணி மேல் திரும்பியுள்ளது.
எலிமினேஷனை தொடர்ந்து காயத்திரி ரகுராம் பேசும் போது, செருப்பால் அடித்தால் கூட அவன் வாங்க தாயாராக இருக்கிறான் என்றும், அதற்கு சினேகன் இவன் இருந்தால் நாங்க இங்க இருக்க மாட்டோம் என பிக் பாஸ்ஸிடம் கூற உள்ளதாக கூறுகிறார்.
மற்றொரு பக்கம் திடீர் என, பரணி எப்படி இந்த இடத்தை விட்டு ஓடுவது என சுவர் ஏறி குதித்து தப்பித்து ஓட நினைக்கிறார்... கஞ்சா கருப்பு இந்த வாரத்தில் எலிமினேஷன் செய்யப்பட்டாலும் பரணியின் கோரிக்கையை ஏற்று பரணியும் இன்றே வெளியேற்றப் படுவாரா... இல்லையா... என பொறுத்திருந்து பாப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.