எலிமினேஷன் ஆகியும் பரணியை கண்கலங்க வைத்த கஞ்சா கருப்பு...

 
Published : Jul 10, 2017, 02:07 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
எலிமினேஷன் ஆகியும் பரணியை கண்கலங்க வைத்த கஞ்சா கருப்பு...

சுருக்கம்

Ganja karuppu makes barani to cry

"பிக் பாஸ்" நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடமும் அதிகமாகவே இருந்தது. 

மடிவு அறிவிக்கப்படும் தருணம் வந்த போது,  இதை பார்ப்பவர்கள் மனநிலை தேர்வு எழுதிய மாணவன்,  தேர்வு முடிவுக்கு கார்த்திருப்பது போல் தான் இருந்தது.

இப்படி மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த வாரத்தின் எலிமினேஷன் கஞ்சா கருப்பு என்பதை அறிவித்தார் கமலஹாசன். கஞ்சா கருப்பு எலிமினேஷன் ஆகவேண்டும் என்று பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்திருப்பதாக கமல் கூறினார்.

எலிமினேஷன் அறிவிக்கப்பட்டத்துடன், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற தயாரான கஞ்சா கருப்பு அனைவரையும் கட்டிப்பிடித்து, பிரியா விடை கொடுத்தார். எப்படியும் தன்னிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு தான் கஞ்சா கருப்பு செல்வார் என ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த பரணிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

கஞ்சா கருப்பு, இவர்கள்  இருவருக்கும் நடைபெற்ற சில பிரச்சனைகளை விளையாட்டாக  பார்க்காமல் உண்மையிலேயே ஒரு பிரச்சனையாக எடுத்துக்கொண்டு பரணியை எதிரியாகவே நினைத்து வெளியேறினார். ஆனால் பரணி அவர் சொல்லிவிட்டு போவாரா என  கண்களில் கண்ணீரோடு பாவமாக தான் பார்த்தார்...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!