
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நேயர்கள் பலர் கஞ்சா கருப்பு தான் எலிமினேஷன் ஆகவேண்டும் என்று நினைத்தாலும், பிக் பாஸ் போட்டியாளர்கள் இந்த வாரம் பரணி தான் வெளியேற்ற படுவார் என நினைத்தார்கள்.
ஆனால் அவர்களுடைய கணிப்பு மிகவும் தவறாக, கஞ்சா கருப்பு தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் மற்றவர்களின் கோபம் பரணி மேல் திருப்பியது. போட்டியாளர்கள் சிலர் இவரை திட்டியதாக தெரிகிறது.
அனைத்தையும் பொறுத்து கொண்ட பரணி ஒரு நிலையில், பிக் பாஸ் அறைக்கு சென்று அனைவரும் எல்லாரும் தன்னை பற்றி எதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், நான் என்ன பாவம் செய்தேன்... என அழுகிறார். ஒரு நிலையில் மிகவும் விரத்தியின் உச்சத்திற்கு சென்று செட்டில் இருந்து தப்பித்து ஓட நினைக்கிறார்.
இதனால் செட்டில் உள்ள ஜன்னல் மீது ஏறி எப்படி வெளியே போகலாம் என்று பார்க்கிறார்... மேலும் தன்னால் இங்கு இருக்க முடியவில்லை, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்... என கூறி இரும்பு முள் வேலியை தாண்டி அவர் குதிக்க முயற்சி செய்யும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இத்தனை நாள் நடந்த வற்றை விட இன்று நடக்க விருக்கும் நிகழ்ச்சி மேலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.