
சின்னத்திரையில் இந்தியில் ஒளிபரப்பாகி வரும் 'எக் யோதா' என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி அல்பாட். இவர் தற்போது பியர்ல்புரி என்ற டிவி நடிகருடன் இணைந்து தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.
இந்த தொடரின் படப்பிடிப்புக்காக உண்மையான பாம்பு ஒன்றை ஏற்பாடு செய்து படக்குழு ஷூட்டிங் நடத்தியுள்ளனர். அந்த பாம்பை நடிகை ஸ்ருதி உள்பட ஒருசிலர் கையில் பிடித்து போஸ் கொடுத்தனர். பின்னர் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.
இதனை கண்ட சமூல நல ஆர்வலர்கள் பாம்பை கையில் பிடித்து போஸ் கொடுத்தவர்கள் மீது தானே வனத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ய வந்த அதிகாரிகளிடம் நடிகை ஸ்ருதி, 'தாங்கள் வைத்திருந்தது உண்மையான பாம்பு இல்லை என்று கூறினார்.
ஆனால் வனத்துறை அதிகாரிகள் அந்த புகைப்படத்தை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்ததில் அது உண்மையான பாம்புதான் என்று உறுதி செய்த பின் . நடிகை ஸ்ருதி அல்பாட், பியர்ல் புரி, தயாரிப்பாளர்களான நிதின் சோலங்கி, உட்கார்ஷ் பாலி ஆகிய நான்கு பேரும் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.