சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'அண்ணாத்த' படத்தின் தோல்விக்கு பின்னர், நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தை, ஏற்கனவே நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து 'கோலமாவு கோகிலா' மற்றும் 'டாக்டர்' ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்த, நெல்சன் திலீப் குமார் இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
சமீபத்தில் 'ஜெயிலர்' படத்தின், இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப்பிரமாண்டமாக நடந்தது. இதில் ஜெயிலர் படத்தில் நடித்திருந்த சிவராஜ் குமார், ஜாக்கி ஷரீஃப், தமன்னா, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் இருந்து வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முதலில் ஒரு அப்பாவி போன்ற கதாபாத்திரத்தில் காட்டியுள்ளார் நெல்சன் திலீப் குமார். பின்னர் அவருக்கு ஏதோ டிசீஸ் இருப்பதாகவும் அது வந்தவர்கள் பூனை போல் அப்பாவியாக இருப்பார்கள், பின்னர் புலி போல் கோபமாகி விடுவார்கள் என விடிவி கணேஷ் ரஜினியின் குடும்பத்தினருடன் பேசுவது போன்றும், பின்னர் தலைவர் தாறுமாறாக ஆக்ஷனில் பின்னி பெடல் எடுக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சு எல்லாம் கிடையாது... வீச்சு தான் என்றும், ஃபுல்லா முடிச்சிட்டு தான் வருவேன் என்று தலைவர் பஞ்ச் டயலாக் பேசுவதும் தாறுமாறாக உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர், ரஜினிகாந்த் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், இப்படத்தின் ட்ரெய்லர் உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஜீவானந்தத்தை போட்டு தள்ள துடிக்கும் குணசேகரன்! வெளியான 'எதிர்நீச்சல்' ப்ரோமோ!
விநாயகன் வெறித்தனமான வில்லனாகவும், கொலை வெறியோடு பேசும் காட்சிகள்... சுனில், யோகி பாபு, வசந்த்ரவி, ரம்யா கிருஷ்ணா, ஜாக்கி ஷெரிஃப் ஆகியோரின் காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும்... ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த, மோகன் லால், தமன்னா, மற்றும் சிவராஜ் குமார் ஆகியோரில் காட்சிகள் இதில் இடம்பெறவில்லை என்பதை கவனித்தீர்களா?. வில்லன்களால் எதோ பெரிய இழப்பை சந்தித்த பின்னரே ரஜினி... அதிரடி அவதாரம் எடுக்கிறார் என்பது தெரிகிறது.