ஜீவானந்தத்தை போட்டு தள்ள துடிக்கும் குணசேகரன்! வெளியான 'எதிர்நீச்சல்' ப்ரோமோ!

By manimegalai a  |  First Published Aug 2, 2023, 4:25 PM IST

குணசேகரன் மற்றும் ஜனனி என இருவருமே ஜீவானந்தம் குறித்து அவர்களுக்கு தெரிந்த வட்டாரத்தில் விசாரித்து வரும் நிலையில், இன்றைய ப்ரோமோவில் ஜீவானந்தத்தை போட்டு தள்ள குணசேகரன் பிளான் போடுவது தெரியவந்துள்ளது.


சன் டிவி தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில்... ஜீவானந்தம் யார் என்பதை தெரிந்து கொள்ள ஜனனி ஒரு பக்கம் போலீசாரிடம் விசாரிக்க... இன்னொரு பக்கம் குணசேகரன் சென்னைக்கு சென்று அவருக்கு தெரிந்த ஒருவரிடம் விசாரிக்க உள்ளார். ஜனனி இதுவரை விசாரித்ததில், ஜீவானந்தம் ஒரு ஏமாற்று பேர்வழி என்பதும், உதவுவதாக ஒரு அமைப்பை வைத்துக்கொண்டு வசதியானவர்கள் சொத்துக்களை ஏமாற்றி தன்னுடைய பெயருக்கு மாற்றிக்கொள்வது தான் அவரின் தொழில் என்பது போல் தெரிவிக்கிறார் அந்த போலீஸ்.

Tap to resize

Latest Videos

திரையுலகில் அதிர்ச்சி..! நடு ரோட்டில் அனாதையாக இறந்து கிடந்த பாலா பட காமெடி நடிகர்!

மேலும் ஜீவானந்ததால் பாதிக்கப்பட்டவரை அந்த போலீஸ் மூலம் ஜனனி சந்தித்து பேசுகிறார். இதுகுறித்து இன்றைய புரோமோவில் வெளியாகியுள்ளதாவது, ஜீவானந்தத்திடம் சொத்துக்களை இழந்த நபர்... ஜனனி - சக்தியை சந்தேகத்துடன் கேள்வி கேட்க, சக்தி நான் குணசேகரன் தம்பி சக்தி என்றும், இவங்க என கூறி கொஞ்சம் தயங்கி நிற்க, ஜனனி நான் அவரின் மனைவி என கூறுகிறார். இதன் மூலம், இத்தனை நாள் சக்தியை ஏற்றுக்கொள்ள தயங்கி ஜனனி இனிவரும் நாட்களில் சக்தியை தன்னுடைய கணவராக ஏற்றுக்கொள்வார் என தெரிகிறது.

ஹீரோயின்களை மிஞ்சும் அழகு..! பிக்பாஸ் கவினின் காதலி மோனிகா யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

மற்றொருபுறம், குணசேகரன் சென்னையில் இருக்கும் நபர் ஒருவரிடம் ஜீவானந்தத்தை பற்றி விசாரிக்க தம்பி கதிருடன் சென்றுள்ளார். அப்போது ஜீவானந்தத்தை தீர்த்து கட்டணும் என கதிரிடம் கூறுகிறார். கதிர் பட்டுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்? ஒருவேளை சொந்தக்காரனா இருப்பானோ என கூறுகிறார். இத்துடன் இன்றைய புரோமோ முடிவடைந்துள்ளது.
 

click me!