இது GVM யூனிவெர்ஸ்.. Joshua படத்தில் துருவ நட்சத்திரம் படத்தின் Reference.. என்ன அது? அவரே வெளியிட்ட உண்மை!

Ansgar R |  
Published : Mar 01, 2024, 02:58 PM IST
இது GVM யூனிவெர்ஸ்.. Joshua படத்தில் துருவ நட்சத்திரம் படத்தின் Reference.. என்ன அது? அவரே வெளியிட்ட உண்மை!

சுருக்கம்

Gautham Vasudev Menon : பிரபல இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் ஜோஷ்வா. பிரபல நடிகர் வருண் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். 

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சுமார் இரண்டு ஆண்டு கால காத்திருப்பதற்குப் பிறகு திரையில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் தான் "ஜோஸ்வா - இமை போல் காக்க". இந்த திரைப்படத்தில் பிக் பாஸ் வருண் நாயகனாக நடிக்க, பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் ஒரு சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அவருடைய இயக்கத்தில் உருவான விக்ரமின் "துருவ நட்சத்திரம்" திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Rashmika: இந்தியால மட்டும் இன்றி.. ஜப்பான்ல கூட ராஷ்மிகாவுக்காக சேர்ந்த ரசிகர்கள் கூட்டம்! வைரலாகும் வீடியோ!

இந்நிலையில் அவருடைய துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும், ஜோஷ்வா திரைப்படத்திலும் பிரபல தொகுப்பாளி திவ்யதர்ஷினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் ஜோஷ்வா திரைப்படத்தில் ஒரு காட்சியில், திவ்யதர்ஷினி குறித்து பேசும் பொழுது, அவருடைய முன்னாள் வாழ்க்கை எப்படி இருந்தது? அவர் ஒரு மிகப்பெரிய குழுவில் இணைந்து செயல்பட்டு வந்தது, அதற்கு தலைவராக ஒருவர் இருந்தது உள்ளிட்ட விஷயங்கள் ஜோஷ்வா படத்தில் இடம்பெற்றிருந்ததாம். 

ஆனால் அந்த திரைப்படம் இன்னும் வெளியாகத நிலையில், இந்த படத்தில் அந்த காட்சிகளை வைப்பது சரியாக கனெக்ட் ஆகாது என்பதனால் படவேலைகள் முழுவதும் முடிந்து, ரிலீசுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் அந்த காட்சியை ஜோஷ்வா படத்திலிருந்து நீக்கியதாக கௌதம் வாசுதேவ் மேனன் தற்பொழுது தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் களமிறங்கும் அதர்வா.. ராஜேஷ் இயக்கத்தில் புது படம் - நாயகி யார் தெரியுமா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?