முடிவுக்கு வந்த 5 வருட போராட்டம்.. ரிலீஸ் தேதி Locked - இடையில் நாளை வெளியாகும் துருவ நட்சத்திரம் Update!

By Ansgar RFirst Published Sep 22, 2023, 8:12 PM IST
Highlights

கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, படப்பிடிப்பு பணிகள் துவங்கவிருந்த நிலையில் அந்தப் படத்தையே கைவிடும் அளவிற்கு சென்று, மீண்டும் 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தான் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தற்பொழுது உருவாகி உள்ள துருவ நட்சத்திரம்.

ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா தான் நடிக்க தேர்வானதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதன் பிறகு பட குழுவுடன் ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக இந்த திரைப்படத்திலிருந்து சூர்யா வெளியேறினார். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் விக்ரம் தேர்வாணர். 

அதற்கு அடுத்த ஆண்டு இந்த திரைப்படம் முழுவீச்சில் படபிடிப்பு பணிகள் துவங்கியது, 2017 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் ஏறத்தாழ 90 சதவிகிதம் முடிக்கப்பட்ட நிலையில், அப்பொழுது இந்த திரைப்படத்தை தயாரித்து வந்த தயாரிப்பு நிறுவனத்துடன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்பட்டு இந்த திரைப்படம் அப்படியே நின்று போனது. 

"மனைவி சொன்னா போனில் கூட படமெடுப்பேன்" - சுகாசினியுடன் ரோம் நகரில் மணிரத்னம் - வைரல் கிளிக்ஸ்!

இதற்கு இடையில், இந்த ஐந்து ஆண்டுகளில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனர் என்கின்ற அவதாரத்தை தாண்டி, பல திரைப்படங்களில் நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மீண்டும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை தானே தயாரித்து தற்பொழுது ரிலீஸ் வரை அதை கொண்டு வந்துள்ளார் என்றால் அது மிகையல்ல. 

இந்த 2023 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படம் குறித்த பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும், நாளை செப்டம்பர் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Censored U/A, and an announcement coming your way at 11 am tomorrow … pic.twitter.com/SwKzxwQhCK

— Gauthamvasudevmenon (@menongautham)

இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் விக்ரம் மட்டுமல்லாமல் இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி ராதிகா சரத்குமார் மற்றும் மாயா. எஸ். கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இரண்டாவது குழந்தைக்கு தந்தையாக போகும் சூப்பர் சிங்கர் திவாகர்! நிறைமாத மனைவிக்கு வளைகாப்பு நடத்திய போட்டோஸ்!

click me!