LGM படம் சூப்பர் வெற்றி.. தயாரிப்பாளர் தோனி மகிழ்ச்சியாக உள்ளார் - எல்ஜிஎம் படக்குழுவினர் அளித்த பேட்டி!

By Ansgar R  |  First Published Jul 30, 2023, 9:11 PM IST

Lets Get Married படம் மூலம், ஒரு தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் களமிறங்கியுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி. இந்நிலையில் அவருடைய முதல் படம், நல்ல வரவேற்பை பெற்று வருவது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளதாக LGM படக்குழு தெரிவித்துள்ளது.


கோவை அவிநாசி சாலையில் உள்ள பிராட்வே திரையரங்கில் இன்று எல்ஜிஎம்(LGM) படக்குழுவின் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இவானா ஆகியோர் திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்தனர். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர், அப்போது பேசிய ஹரிஷ் கல்யாண்..

கோவைக்கு வருவது மிகப்பெரிய சந்தோஷம், எங்களுடைய படம் இங்கே  வெளியாகி உள்ளது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும், குடும்பங்கள் அனைவரும் இந்த படத்தை மகிழ்ச்சியாக கண்டுகளித்து வருகின்றனர் என்று கூறினார்.

Tap to resize

Latest Videos

வேட்டையன் ராஜா வரார்... சந்திரமுகி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவித்த ராகவா லாரன்ஸ்

படம் பார்க்காதவர்கள் படத்தை தியேட்டரில் போய் பாருங்கள், பொதுமக்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல கருத்துக்கள் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தோனியின் முதல் படம் இதுவென்பதால் அவர் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளார். நாங்கள் இந்த படத்தில் நடித்ததை எங்களுக்கு கிடைத்த ஒரு மிக சிறந்த வாய்ப்பாக பார்க்கிறோம் என்றார் ஹரிஷ் கல்யாண். 

மேலும் படத்தில் எனக்கும் இவனாவுக்குமான கெமிஸ்ட்ரியை விட இவனா மற்றும் நதியா மேடம் இடையே உள்ள கெமிஸ்ட்ரி சிறப்பாக உள்ளது என்று மக்கள் ககூறுகின்றனர் என்றார் அவர். அவரை தொடர்ந்து தொடர்ந்து பேசிய நடிகை இவானா, நாங்களும் ரசிகர்களுடன் படம் பார்த்தோம், படம் பார்த்தவர்கள் அனைவரும் நன்றாக உள்ளது என தெரிவித்தார்கள். 

நிச்சயம் எதிர்வரும் காலங்களில் இது போன்ற நல்ல பல படங்களில் நடிப்பேன் என்று அவர் கூறினார். 

கிறிஸ்டோபர் நோலனின் Oppenheimer.. 10 நாளில் படைத்த சிறப்பான சாதனை - இந்திய அளவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

click me!