Fake ID மூலம் என்னுடன் சேட்டிங். என்னை டேட்டிங் செய்ய விரும்பும் பாலிவுட் நடிகர்கள் - புயலை கிளப்பும் கங்கனா!

By Ansgar R  |  First Published Jul 30, 2023, 5:37 PM IST

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தமிழில் முதல் முதலில் அறிமுகமான திரைப்படம் கடந்த 2008ம் ஆண்டு வெளியான தாம் தூம் என்பது குறிப்பிடத்தக்கது.


அதன் பிறகு இவர் நேரடியாக நடிக்கும் அடுத்த தமிழ் படம் சந்திரமுகி 2 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் "எமர்ஜென்சி" என்ற திரைப்படத்தில், மறைந்த அரசியல் தலைவர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தை இவர் ஏற்று நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் இவர் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் திரையுலகில் களமிறங்கி இருக்கிறார்.

பாலிவுட் பிரபலங்கள் பற்றியும் அரசியல் தலைவர்கள் பற்றியும் அப்போது பல புகார்களை முன் வைத்து வரும் கங்கனா, தற்பொழுது பாலிவுட் பிரபலங்கள் சிலர், Fake ஐடிகளை பயன்படுத்தி தன்னுடன் 
சாட்டிங் செய்து வருவதாகவும், தன்னை டேட்டிங் செய்ய விரும்புவதாகவும் புகார் ஒன்றை முன்வைத்துள்ளார். 

Tap to resize

Latest Videos

மக்கள் மனதில் நீங்காத இடம்.. ஆண்டுகள் கடந்து அசால்ட்டாக ஓடிவரும் டாப் தமிழ் சீரியல்கள் - ஒரு லுக்!

தனது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் கங்கனா, பாலிவுட் நடிகர்கள் இருவர் மீது தான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து பேசி அவர் "திரைப்பட மாபியாக்கள் எப்பொழுதும் தங்கள் இயல்பான வேலையில் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றனர், மேலும் நான் ஏற்கனவே டேட்டிங் செய்த ஒரு பிரபல பாலிவுட் நடிகர், பொதுவாக அவர் போலியான சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்தி என்னிடம் சேட் செய்வது அவருடைய வழக்கம்".

"ஒரு முறை அவர் என்னுடைய சமூக வலைத்தளத்தை ஹேக் செய்து முடக்கி என்னை மிரட்டியதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல பெண் ரசிகர்களை அதிகமாகக் கொண்ட மற்றொரு பாலிவுட் நடிகர், என் வீட்டிற்கு வந்து தன்னை டேட்டிங் செய்யுமாறு கெஞ்சினார்". 

"என்னை பல இடங்களுக்கு அவர் ரகசியமாக பின் தொடர்ந்து வந்தார், ஆனால் அதை நான் புறக்கணித்துவிட்டேன்" என்றும் கூறியுள்ளார். அதர்மத்தை அளிப்பதே தர்மத்தின் முக்கியமான நோக்கம் என்பதால் அவர்களை அழிப்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்று கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதை மேற்கோளிற்கு காட்டியுள்ளார் கங்கனா ரனாவத்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68.. விஜயின் தம்பியாக அவர் நடிக்கிறாரா? - அதுக்குள்ள 21 வருஷம் ஓடிருச்சு!

click me!