கழுத்தை நெரிந்த கடன்..! பிரபல நடன இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை..!

Published : May 01, 2023, 12:47 PM ISTUpdated : May 01, 2023, 12:56 PM IST
கழுத்தை நெரிந்த கடன்..! பிரபல நடன இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை..!

சுருக்கம்

பிரபல நடன இயக்குனர் சைதன்யா, தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தக சம்பவம் தெலுங்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'தீ' நிகழ்ச்சியின் நடன இயக்குனர் சைதன்யா தற்கொலை செய்து செய்துகொண்டுள்ளார். மேலும் இறப்பதற்கு முன்பாக கடைசியாக அவர் வெளியிட்ட செல்ஃபி வீடியோவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அன்ஹா வகையில் பிரபல தெலுங்கு சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'தீ' என்கிற டான்ஸ் ஷோ மூலம் நடன இயக்குனராக பிரபலமானவர் சைதன்யா. இவர் நடன நிகழ்ச்சிகள் மட்டும் இன்றி, சில பிரபலங்களுக்கும் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளதால் திரையுலகினர் மத்தியில் மிகவும் பிரபலம்.

Breaking: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் முரளி வெற்றி!

இவருடைய நடன அசைவுகளை பார்த்து பிரமித்து, இந்தியன் மைக்கில் ஜாக்ஸனான பிரபு தேவாவே புகழ்ந்து பாராட்டியுள்ளார்.  இந்நிலையில் சைதன்யா, கடுமையான நிதி நெருக்கடியால் அவதிப்பட்டு வந்ததாகவும்... இதன் காரணமாக சமீப காலமாக மன உளைச்சலில் சிக்கி தவித்ததாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் இவர், இறப்பதற்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு, நெல்லை கிளப் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

எந்த நடிகராலும் செய்யமுடியாத சாதனைகளை செய்தவர் அஜித்..! தல-யை ரசிகர்கள் கொண்டாடவும் இது தான் காரணம்!

சைதன்யா பதிவு செய்த வீடியோவில், தனது பெற்றோர், சகோதரி, சக டான்ஸ் மாஸ்டர்கள் மற்றும் நடனக் கலைஞர்களை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டார். பணப்பிரச்சினையை சமாளிக்க முடியாமல் இப்படி ஒரு முடிவை எடுப்பதாக கூறியுள்ளார். இதனை சமாளிக்கு எவ்வளவோ முயன்றும் பலனில்லை என்று கூறியுள்ளார். சைதன்யாவுக்கு தீ நிகழ்ச்சி மூலம் பெயர், புகழ் கிடைத்தாலும் போதிய வருமானம் கிடைக்கவில்லையாம். வீட்டில் டிவி கூட வாங்க முடியாக சூழலில் தான் அவர் இருந்ததாகவும்... இதனால், கடன் தொல்லை கழுத்தை நெருக்க துவங்கியதால் இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது.

சுட்டி குழந்தை முதல்.. ஹான்சம் ஹீரோ வரை! அஜித்தின் ரேர் போட்டோஸ்

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இவரின் மரணத்திற்கு, தெலுங்கு திரையுலகை சேர்ந்த, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?