திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் நடிகர் சமுத்திரக்கனி குடும்பத்துடன் சாமி தரிசனம்

Published : Apr 30, 2023, 03:39 PM IST
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் நடிகர் சமுத்திரக்கனி குடும்பத்துடன் சாமி தரிசனம்

சுருக்கம்

நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி தனது மகன், மகள் மற்றும் மனைவியுடன் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட திருக்க்கொள்ளிக்காடு சிற்றூரில் பொங்கு சனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து வழிபடுவதுடன் பரிகார பூஜைகளை செய்வது வழக்கம்.

அந்த வகையில் கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டார். அதன் பிறகு பல பிரபலங்கள் இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டு சென்றுள்ளனர். ஏழரை ஆண்டுகள் சனி ஒருவரது ராசியில் இருக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் பொங்கு சனி நடைபெறும் இரண்டரை ஆண்டு காலத்தில் இங்கு வந்து பொங்கு சனீஸ்வரரை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதையும் படியுங்கள்... அடுத்தடுத்து வர உள்ள ஏகே 62 படத்தின் 2 மாஸ் அப்டேட்டுகள்... அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் டிரீட்

அதன் அடிப்படையில் இன்று இந்த ஆலயத்திற்கு இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி குடும்பத்துடன் வருகை தந்து அபிஷேகத்தை பார்த்ததுடன் ஒரு மணி நேரம் ஆலயத்தில் இருந்து சிறப்பு வழிபாடு நடத்தி விட்டு சென்றுள்ளார். அவருக்கு ஆலயத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி வருகையை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் ஆலயத்திற்கு திரண்டு வந்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதையும் படியுங்கள்... அட்டர் பிளாப் ஆன சாகுந்தலம்... 25 வருட கெரியரில் இவ்ளோ பெரிய நஷ்டத்தை சந்தித்ததில்லை என புலம்பிய தில் ராஜு

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சவுக்கு சங்கர் கைதுக்கு நான் தான் காரணம்..! தானாக முன்வந்து ஸ்டேட்மெண்ட் கொடுத்த சினிமா தயாரிப்பாளர்
ஆதி குணசேகரனுக்கு ஆட்டம் காட்டும் அப்பத்தா.. அறிவுக்கரசி எடுக்கும் எதிர்பாரா முடிவு - களம் மாறும் எதிர்நீச்சல்