படைவீரன் படப்பிடிப்பிற்கு திடீர் விசிட் அடித்த தனுஷ்...! 

 
Published : Nov 23, 2017, 06:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
படைவீரன் படப்பிடிப்பிற்கு திடீர் விசிட் அடித்த தனுஷ்...! 

சுருக்கம்

dhanush visit padaiveerm shooting spot

இயக்குனர் தனா இயக்கத்தில் பாடகர் விஜய் ஜேசுதாஸ் முதல் முறையாக தமிழில் கதாநாயகனாக அறிமுகம் கொடுக்கும் திரைப்படம் படை வீரன். இந்தப் படத்தை  தயாரிப்பாளர் மதிவாணன் தயாரிக்கிறார்.  இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர்  பாரதிராஜா  நடித்துள்ளார்.

இயக்குனர்  மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கும் படைவீரன் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு இன்று இங்கு திடீர் என  நடிகர் தனுஷ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

முன்னதாக படைவீரன் படத்தை பிரத்தியேகமாக தனுஷிற்காக படக்குழுவினர் போட்டுக் காட்டியுள்ளனர். படம் தனுஷிற்கு மிகவும் பிடித்திருந்ததால் அவர் படைவீரன் படத்திற்காக கார்த்திக் ராஜா இசையில், ப்ரியன் வரிகளில் உருவான "லோக்கல் சரக்கா பாரின் சரக்கா... ஊத்திக்குடிச்சா எல்லாம் ஒன்னுடா... " எனத் தொடங்கும் பாடலை தனுஷ் பாடி கொடுக்க, படம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தனுஷ் பாடிய பாடலை காட்சிப்படுத்தி படக்குழுவினர் படத்தை நிறைவு செய்துள்ளனர்.

படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ் பாடல் படமாக்கப்பட்ட விதத்தை மிகவும் பாராட்டினார். படைவீரன் படம் அடுத்த மாதம் வெளியாகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்