
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்ட ஜூலி ... பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் சர்ச்சைகளில் சிக்கினார். இவரை வீரத் தமிழச்சி என்று அழைத்த பலர் போலி என்று அழைக்கும் நிலைக்கு அவரே தன்னுடைய வஞ்சக புத்தியால் தரம் தாழ்த்திக்கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் உள்ளே இருந்த போதும் வெளியே சென்றதும் தன்னுடைய செவிலியர் வேலையை செய்வேன் எனக் கூறி வந்த இவர், இப்போது சின்னத்திரை தொகுப்பாளராக மாறி மொக்கை வாங்கிக் கொண்டிருக்கிறார். அதே போல் திரைப்படங்கள் நடிப்பதற்கும் இயக்குனர்களிடமும் கதை கேட்டு வருகிறார்.
இவருக்கு சமீபத்தில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி, உங்கள் மீது மக்கள் கோபமாக இருக்கின்றனர். அவர்களுடைய கோபம் தீரும் வரை சில காலம் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் பெற்றோர் பேச்சைக் கேட்டு நடக்கும் படியும் அறிவுரை கூறி இருந்தார்.
ஆனால் அதையெல்லாம் சற்றும் காதில் வாங்கிக்கொள்ளாமல், ஜூலி அவருடைய இஷ்டப் படி நடந்துகொண்டு சமீபத்தில் பிரபல தொகுப்பாளர் ரக்ஷனுடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். பின் இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் ஊடகங்களில் கூறப்பட்டது.
தற்போது ஜூலி ஏர்ல பறந்து பறந்து ஆடிய சாவு குத்து நடனம் மறுபடியும் பல்வேறு விமர்சனங்களை அள்ளித் தெளித்த வருகிறது. அதிலும் அவர் பின்னால் 'தமிழ் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த குரல்' என்கிற வசனமும் உள்ளது. ஜூலி உண்மையில் சற்று நன்றாகவே நடனமாடக் கூடியவர் தான் என்று பலரும் கூறி வரும் நிலையில். இந்த நடனம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாவுக் குத்து நடனத்திற்கு ஏர் ல பறந்து பறந்து நடனமாடியுள்ளார் ஜூலி, அதே போல் தலை கீழே நின்று கூட இந்த நடனத்தை ஆடியுள்ளார். இவர் இப்படி ஆடியதைக் கண்டு அங்குக் கூடி இருந்த பார்வையாளர்கள் இதை காமெடி நிகழ்ச்சி என சிரித்துள்ளனர். எப்படியும் சினிமாவில் பிரபலமாகி விட வேண்டும் என்று ஜூலி இது போன்ற நடனங்களை ஆட நினைப்பது தவறில்லை என்றாலும் என்ன நமக்கு வருமோ அதை இப்போது செய்துவிட்டு... முறையாக நடனம் கற்றுக்கொண்டு இது போன்ற நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் என இவருக்கு பலர் அறிவுரையும் கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.