போர் தொழில் பட இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்... அசுரன் உடன் அடுத்த சம்பவத்துக்கு தயாராகும் விக்னேஷ் ராஜா

By Ganesh A  |  First Published Jun 20, 2024, 8:37 AM IST

போர் தொழில் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்க உள்ள அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.


தனுஷ் 50

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவர் நடிப்பில் தற்போது அரை டஜன் படங்கள் தயாராகி வருகிறது. அந்த வகையில் ராயன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அப்படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். தனுஷின் 50வது படமான ராயன் வருகிற ஜூலை மாதம் 26ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி தானே இயக்கியும் உள்ளார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.

Tap to resize

Latest Videos

தனுஷின் கைவசம் உள்ள படங்கள்

அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் குபேரா என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. சேகர் கம்முலா இயக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். இது பான் இந்தியா படமாக தயராகிறது. மேலும் இளையராஜாவின் பயோபிக் படத்திலும் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தை கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது. சைடு கேப்பில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

இதையும் படியுங்கள்... இயக்குனர் வெற்றிமாறனுக்கு இந்த கெட்ட பழக்கங்கள் எல்லாம் இருந்துச்சா.. அவரே சொன்ன பதில்!

தனுஷ் ரொம்ப பிஸி

இதுதவிர இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு படம், தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறன் உடன் ஒரு படம் என தனுஷின் லைன் அப் நீண்டுகொண்டே செல்கிறது. இப்படி நிற்க கூட நேரமின்றி பம்பரம் போல் சுழன்று கொண்டிருக்கும் நடிகர் தனுஷ், தற்போது மேலும் ஒரு சென்சேஷனல் இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ளாராம். அவர் வேறுயாருமில்லை போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா தான்.

தனுஷின் அடுத்த படம்

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், தற்போது தனுஷ் கைவசம் உள்ள படங்களை முடித்த பின்னர் இப்படத்தில் நடிப்பார் என்றும் பேச்சு அடிபடுகிறது. நடிகர் தனுஷ் இதுவரை தன்னுடைய கெரியரில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்ததே இல்லை என்பதால் அவர் இப்படத்தில் போலீஸாக நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர். ஏனெனில் விக்னேஷ் ராஜா போலீஸ் கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... தப்பு பண்ணிட்டேன்... அந்த படத்துல நடிச்சிருக்கவே கூடாது - நயன்தாராவுக்கு கசப்பான அனுபவத்தை கொடுத்த கஜினி

click me!