கோடை வெய்யிலுக்கு இதமான மழை சாரல்... தனுஷ் பாடிய 'திரெளபதி முத்தம்' பாடல் வெளியாகியது..!

By manimegalai aFirst Published Mar 11, 2021, 4:49 PM IST
Highlights

தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' படத்தில் அவர் பாடிய 'தட்டான் தட்டான்' பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ளது.
 

தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' படத்தில் அவர் பாடிய 'தட்டான் தட்டான்' பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் 'கர்ணன்'.  இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், ' திரெளபதி முத்தம் தட்டான் தட்டான்' என்கிற பாடல் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஏற்கனவே 'கர்ணன்' படத்தில் இருந்து வெளியான, 'கண்டா வரச்சொல்லுடா' மற்றும் பண்டாரத்தி புராணம்' ஆகிய மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தனுஷ் பாடியுள்ள பாடலான  ’திரெளபதி முத்தம் தட்டான் தட்டான்' பாடலும் அதே அளவிலான வரவேற்பை பெற்று வருகிறது.

கிராமத்து மண் மணம் மாறாத பாடல் வரிகளில்,  கோடை வெயிலுக்கு இதமாக நெஞ்சை கொள்ளை கொள்ளும் மழை சாரலில் நனைய வைத்துள்ளது இந்த பாடல். 'தட்டான் தட்டான்' பாடல்  வெளியான சில மணி நேரங்களிலேயே  ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

click me!