ஏ.ஆர்.ரகுமானின் கனவு படம்... 99 ஸாங்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published : Mar 11, 2021, 04:12 PM IST
ஏ.ஆர்.ரகுமானின் கனவு படம்... 99 ஸாங்ஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுருக்கம்

தனது கனவுப்படம் என்று 6 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த ஏ.ஆர்.ரகுமான்  ‘99 சாங்ஸ்’ பட ரிலீஸ் தேதி குறித்து ட்விட்டர் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார்.  

தனது கனவுப்படம் என்று 6 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த ஏ.ஆர்.ரகுமான்  ‘99 சாங்ஸ்’ பட ரிலீஸ் தேதி குறித்து ட்விட்டர் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார்.

விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்தப் படத்தை ரஹ்மானின் ஒய்.எம்.மூவிஸ் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. 2015ல் அறிவிக்கப்பட்டு 6 வருடங்களுக்கும் மேலாகத் வெளியாகாமல் உள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, எகான் இணைந்து நடித்துள்ளனர். மற்றும் சில முக்கியப்பாத்திரங்களில் லிசா ரே, மனீஷா கொய்ராலா,இசையமைப்பாளரும் டிரம்மருமான ரஞ்சித் பரோத் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: சம்பள விஷயத்தில் கறார்! பூஜா ஹெக்டே தளபதி 65 படத்திற்கு எத்தனை நாள் கால்ஷீட் கொடுத்திருக்காங்க தெரியுமா?
 

ஒரு பாடகர் பெரும்போராட்டத்துக்குப்பின் புகழ்பெற்ற  இசையமைப்பாளர் ஆவதுதான் கதையின் ஒன் லைன் என்று தகவல் பரவியபோது, படத்தின் கதாசிரியரும் ரஹ்மானே என்பதால் இப்படம் ரஹ்மானின் சுயசரிதை என்று செய்தி பரவியது. ஆனால் அச்செய்தியை ரஹ்மான் மறுத்தார்.

மேலும் செய்திகள்: குழந்தையா இருக்கும் போது ஓவர் கியூட்.! அக்காவுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!
 

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் தயாரித்து, எழுதியிருக்கும் முதல் படமான '99 சாங்ஸ்' என்கிற இசையை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான காதல் படத்தின் வெளியீடு குறித்து ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். '99 சாங்ஸ்' திரைப்படம் சர்வதேச அளவில், இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது.

' 99 ஸாங்ஸ்' ..  ஏப்ரல் 16 ஆம் தேதி 2021 அன்று தமிழில் வெளியிடப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!