சம்பள விஷயத்தில் கறார்! பூஜா ஹெக்டே தளபதி 65 படத்திற்கு எத்தனை நாள் கால்ஷீட் கொடுத்திருக்காங்க தெரியுமா?

By manimegalai aFirst Published Mar 11, 2021, 2:43 PM IST
Highlights

'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து, தளபதி விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள அவரது 65 ஆவது படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் நடிக்க இவர் எத்தனை நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிச்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தை நயன்தாராவை வைத்து 'கோலமாவு கோகிலா', சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்' ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலிப் குமார் இயக்க உள்ளதாகவும் ஏற்கனவே அதிகார பூர்வ தகவல் வெளியானது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்க உள்ளார்.

இதனை அறிவிக்கும் விதமாக சன் பிச்சர் நிறுவனம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டது. அதில் கலாநிதிமாறனுடன், விஜய் பேசி கொண்டு வருவது போலவும், இதை அடுத்து நெல்சன் திலிப் குமார் பேசுவது போலவும். பின்னர் தோட்ட தெறிக்க...  கார் பறக்கும்... அனிமேஷன் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள நிலையில் , இயக்குனர் நெல்சன் திலீப் குமார், லொகேஷன் பார்ப்பதற்காக ரஷ்யா பிறந்துள்ளார். அங்கிருந்தப்படி அவ்வப்போது சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தட்டி விட தளபதி ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

இந்த படத்தில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'முகமூடி' படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பூஜா ஹேக்டே தளபதி 65 படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்றாலும், இவர் தான் கதாநாயகி என ஊர்ஜிதமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

தளபதி 65 படத்தில் நடிக்க, 3.5 கோடி சம்பளம் கேட்டு கறார் காட்டிய பூஜா, இந்த படத்திற்காக சுமார் 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். மேலும் தளபதி விஜய் இந்த படத்திற்காக, 60 முதல் 70 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கதாநாயகிக்கும் முக்கியத்தும் கொடுத்து பல காட்சிகள் எடுக்க பட உள்ளதாகவும், ரொமான்டிக் காட்சிகள் கூடுதலாகவே இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

click me!