வசூலில் தட்டித்தூக்கிய "பட்டாஸ்"... இன்று வரை தமிழகத்தில் மொத்த கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published Jan 29, 2020, 6:08 PM IST
Highlights

மாமனார் நடிப்பில் கடந்த வாரம் வெளியான, 'தர்பார்' படமும், மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ திரைப்படமும் பட்டாஸ் வசூலை பாதித்துவிட்டதாகவும், தர்பாரை போல பட்டாஸ் படமும் சோலோவாக ரிலீஸ் ஆகியிருந்தால், வசூலில் செம்ம கெத்து காட்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'பட்டாஸ்'. 'கொடி' படத்தை தொடர்ந்து, இரண்டாவது முறையாக இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் தனுஷ்.

தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளில் ஒன்றான அடிமுறை என்கிற, கலையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக கர்ப்பிணியாக இருந்த சினேகா அடிமுறை பயிற்சி கற்ற வீடியோவும், அதே தற்காப்பு கலையை பயன்படுத்தி போலீஸ்காரர்களை வெளுத்து வாங்கும் வீடியோவும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தில் அப்பாவாக நடித்திருக்கும் தனுஷுக்கு ஜோடியாக, நடிகை சினேகாவும், மகனாக நடித்திருக்கும் தனுஷுக்கு ஜோடியாக மெஹரின் பிரீசண்டா ஆகியோர் நடித்துள்ளனர். சத்திய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் 'பட்டாஸ் ' திரைப்படம், தமிழகத்தில் இந்த நாள் வரை 30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!