Dhanush Vaathi Movie: தனுஷின் 'வாத்தி'... வித்தியாசமான டைட்டிலை வெளியிட்ட படக்குழு! இதை கவனித்தீர்ர்களா?

Published : Dec 23, 2021, 12:36 PM IST
Dhanush Vaathi Movie: தனுஷின் 'வாத்தி'... வித்தியாசமான டைட்டிலை வெளியிட்ட படக்குழு! இதை கவனித்தீர்ர்களா?

சுருக்கம்

நடிகர் தனுஷ் (Dhanush) தன்னுடைய கைவசம் உள்ள அடுத்தடுத்த படங்களை நடிப்பதில் கவனம் செலுத்துவது மட்டும் இன்றி, வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதிலும் கவனம் செலுத்துகிறார். அந்த வகையில் தனுஷ் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடிக்க உள்ள படத்தின் வித்தியாசமான டைட்டில் இன்று வெளியாகியுள்ளது.  

நடிகர் தனுஷ் தன்னுடைய கைவசம் உள்ள அடுத்தடுத்த படங்களை நடிப்பதில் கவனம் செலுத்துவது மட்டும் இன்றி, வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதிலும் கவனம் செலுத்துகிறார். அந்த வகையில் தனுஷ் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடிக்க உள்ள படத்தின் வித்தியாசமான டைட்டில் இன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு, பாலிவுட், ஹாலிவுட் என நடித்து அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார். ஓவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்பது மறுக்க முடியாத ஒன்று.

எனவே தனுஷ் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. தன்னுடைய திறமையை நடிப்போடு நிறுத்தி கொள்ளாமல்... நடிப்பை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாகவே வலம் வருகிறார்.  தற்போது இவர் மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய தமிழ் படங்களில் நடித்து முடித்துள்ளார், சமீபத்தில் இவர் பாலிவுட்டில் அக்ஷய் குமார் , மற்றும் சாரா அலிகானுடன் நடித்த அட்ரங்கி ரே படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதே போல் ஹாலிவுட்டில், 'தி கிரே மேன்' என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழில் தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் 'நானே வருவேன்' படப்பிடிப்பும் பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தனுஷ் தெலுங்கில் அறிமுகமாக உள்ள, படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், இன்று காலை ஃபர்ஸ்ட் லுக்குடன் இதுகுறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'மாஸ்டர்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமான வார்த்தைகளில் ஒன்றான, 'வாத்தி' என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை  வெங்கி அட்லூரி என்பதை எழுதி இயக்க உள்ளார். மேலும் இப்படத்தை நாக வம்சில்ஸ் மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் இந்த படத்திற்கு வாத்தி என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது போல்... பிளாக் போர்டுடன் கூடிய போஸ்டர் வெளியாகியுள்ளதாலும் அதில் சில பாடங்கள் இடம்பெற்றிருப்பதாலும், இப்படத்தில் தனுஷ் முதல் முறையாக கல்லூரி பேராசிரியராகவோ... அல்லது பள்ளி ஆசிரியராகவோ நடிக்க வாய்ப்புள்ளது தெரிகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!