
தொலைக்காட்சி, சினிமா ரசிகர்களுக்கு நடிகை தீபா மிகவும் பரிச்சயம். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி இவரை சமூக வலைத் தளங்களிலும் பிரபலமாக்கியது. இந்த நிகழ்ச்சியின் 2 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தீபா. இந்த நிகழ்ச்சிக்கு முன் இவர் சில சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த நிகழ்ச்சி மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
குக் வித் கோமாளிக்கு முன்பு வரை சென்டிமென்ட் கேரக்டரில் மட்டும் நடித்து வந்த தீபா. பின்னர் சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் காமெடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்...
முன்னதாக ஒரு தனியார் சேனலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உடல் கேலி செய்யும் வகையில் பேசிய ஒரு நபரை கண்டித்தார் தீபா. அப்போது சற்று ஆவேசமாக பேசிய அவர், இறுதியில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் ஏற்பாட்டின் பேரில் அப்படிப் பேசியதாகக் கூறினார். இந்த வீடியோ அப்போது வைரலாகி வந்தது...
இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி சோவின் போது தீபா கவுன் அணிந்து கலக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார். இந்த வீடியோவில் நீல நிற கவுன் அணிந்து அமர்ந்தபடி நளினமான பாவனைகளை தீபா கொடுத்துள்ளார். இந்த வீடியோவில் நீல நிற கவுன் அணிந்து அமர்ந்தபடி வாடா ஏன் வீரா பாடலுக்கு நளினமான பாவனைகளை தீபா கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.