
தனுஷ் நடிக்கும் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது.
'வடசென்னை, வேலையில்லா பட்டதாரி ௨ மற்றும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்த தனுஷ். ஹாலிவுட் படத்துக்காக 3 மாதங்கள் தேதிகள் ஒதுக்கினார். இதன் படப்பிடிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
கனடாவை சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் நடைபெற்று வருகிறது. பிரபல ப்ரெஞ்ச் நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard' திரைப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி ஆகியோர் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'வடசென்னை', 'மாரி 2' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார் தனுஷ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.