
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் உலக அளவில் பெரும் ஆதரவை பெற்று ரூ.1500 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
இந்த படத்தை பார்த்த கிட்டத்தட்ட அனைவருமே பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்திருந்த நிலையில் பாலிவுட் பிரபலம் கமால் ஆர்.கான் என்றா கே.ஆர்.கே மட்டும் 'பாகுபலி' படம் தன்னை தென்னிந்திய படங்களை பார்க்கத் தூண்டியதாகவும், ஆனால் 'பாகுபலி 2' பார்த்த பிறகு இனி தென்னிந்திய படங்களை பார்ப்பது இல்லை என முடிவு செய்துள்ளதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து தனது தவறான விமர்சனத்திற்கு மன்னிப்பு கேட்பதாகவும், இந்த படம் தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் மக்களுக்கு பிடித்துள்ளதாகவும், ராஜமெளலி தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.