தமிழ் நடிகர்களில் இதுவே முதல் முறை..! ரஜினி, கமல், விஜய், சூர்யாவை முந்தி கெத்து காட்டும் தனுஷின் சாதனை!

Published : Jul 18, 2021, 03:37 PM IST
தமிழ் நடிகர்களில் இதுவே முதல் முறை..! ரஜினி, கமல், விஜய், சூர்யாவை முந்தி கெத்து காட்டும் தனுஷின் சாதனை!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் சமூக வளைத்ததில், 1 கோடி ஃபாலோவர்ஸை பெற்ற முதல் தமிழ் நடிகர் என்கிற சாதனையை படைத்துள்ளார். இதனை தனுஷ் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.  

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் சமூக வளைத்ததில், 1 கோடி ஃபாலோவர்ஸை பெற்ற முதல் தமிழ் நடிகர் என்கிற சாதனையை படைத்துள்ளார். இதனை தனுஷ் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு, பாலிவுட், ஹாலிவுட் என நடித்து அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார். ஓவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். எனவே இவர் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.

இவருடைய நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக சமீபத்தில்,  'அசுரன்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.  மேலும் அவரது 'கர்ணன்' நல்ல விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல், பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இந்த படத்திலும் தனுஷின் எதார்த்தமான நடிப்புக்கு அடுத்த தேசிய விருது கிடைக்கும் என பல திரைப்பட விமர்சகர்கள் கூறியுள்ளனர். 

தன்னுடைய திறமையை நடிப்போடு நிறுத்தி கொள்ளாமல்... நடிப்பை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாகவே வலம் வருகிறார். அதே போல் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் முழு நீள பாத்திரத்தில் நடித்த முதல் தமிழ் நட்சத்திரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தனுஷ். அவர் தற்போது ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் 'தி கிரே மேன்' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்த படப்பிடிப்பை முடிந்து கொடுத்துவிட்டு, சில தினங்களுக்கு முன் இந்தியா வந்த தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடித்து வரும் இன்னும் பெயரிடாத படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாக 'மாஸ்டர்' பட ஹீரோயின் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அடுத்தடுத்து, வெற்றிமாறன், செல்வராகவன், மாரி செல்வராஜ், சேகர் காமுல்லா, என முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க அரை டஜன் படங்கள் இவரது கைவசம் உள்ளது.

தற்போது தனுஷ், தமிழ் சினிமாவில் ட்விட்டரில் 10 மில்லியன்  ஃபாலோவர்சை கொண்ட பிரபலம் என்கிற சாதனையை படைத்துள்ளார். இந்த தகவலை தனுஷின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இவரை தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் கமல் 68 லட்சம் ஃபாலோவர்ஸ்சுடன் இரண்டாவது இடத்திலும், 59 லட்சம் ஃபாலோவர்ஸ்சுடன் ரஜினிகாந்த் 3 ஆவது இடத்திலும், 32 லட்சம் ஃபாலோவார் வைத்திருக்கும் விஜய் 4 ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!